close
Choose your channels

‘Z’ பிரிவு, ‘Y’ பிரிவு பாதுகாப்பு குறித்த ஒரு விரிவான விளக்கம்

Friday, January 10, 2020 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

‘Z’ பிரிவு, ‘Y’ பிரிவு பாதுகாப்பு குறித்த ஒரு விரிவான விளக்கம்

அரசியல் தலைவர்களின் பாதுகாப்பினை உறுதி செய்வது தற்போது மத்தியப் பாதுகாப்பு அமைச்சகத்தின் கடமையாகக் கருதப்படுகிறது. மத்திய அரசின் கட்டுப்பாட்டில் இருப்பதால் ஒருவருக்கு வழங்கப்படுகின்ற பாதுகாப்பினை விலக்கிக் கொள்வதற்கான அதிகாரங்களும் மத்திய அரசுக்கு இருக்கிறது என்றே சொல்ல வேண்டும். ஆனால் மத்தியில் மட்டுமல்லாது பெரும்பாலும் Z+, Z, X, Y பிரிவு பாதுகாப்பினை மாநிலங்களில் பணியாற்றுகின்ற VIP யினர் அனுபவித்து வருகின்றன. எனவே Z+, Z, X, Y பாதுகாப்பின் செயல்பாடுகளில் மாநிலங்களுக்கும் பங்கு இருக்கிறது என்றே சொல்லலாம். சில நேரங்களில் அச்சுறுத்தல் காரணங்களுக்காகவும் இந்தப் பாதுகாப்பு வழங்கப்படுகின்றன என்பதால் மாநில அரசுகளின் ஒப்புதலும் விலக்கலின்போது முக்கியமாகிறது.

ஆனால் VVIP களுக்கு வழங்கப்படும் எஸ்.பி.ஜி (SPG) பாதுகாப்பானது வரையறுக்கப்பட்ட கொள்கைச் சட்டங்களால் செயல்படுகிறது. எனவே இதில் பெரிய அளவிற்கான மாற்றங்களைச் செய்ய முடியாது.

விலக்கிக் கொள்ளப்பட்ட பாதுகாப்புக் குழுக்கள்

தமிழகத்தில் எதிர்க்கட்சி தலைவருக்கு வழங்கப்பட்டு வந்த ‘Z‘ பிரிவு பாதுகாப்பு தற்போது விலக்கிக் கொள்ளப்பட்டுள்ளது. பாதுகாப்பில் 3 ஆம் தரமான Z பிரிவு பாதுகாப்பு விலக்கிக் கொள்ளப் பட்டுள்ளதைக் குறித்து சிலர் கருத்துக்கள் தெரிவித்து வருகின்றனர். மத்தியப் பாதுகாப்பு அமைச்சகம், பாதுகாப்பு வசதிகளுக்கான செலவுகள் அதிகமாகி வருவதைக் குறைப்பதற்காகவே இந்த ஏற்பாடுகள் செய்யப்படுவதாக விளக்கம் அளித்திருக்கிறது.

அதே போன்று, தமிழகத்தின் துணை முதலமைச்சரான ஓ. பன்னீர் செல்வம் அவர்களுக்கு வழங்கப்பட்டு வந்த ‘Y‘ பிரிவு பாதுகாப்பும் விலக்கிக் கொள்ளப்பட்டுள்ளது. ஓ. பன்னீர் செல்வம் முதலமைச்சர் பதவியினை வகித்து, தற்போது துணை முதலமைச்சர் பதவியை வகித்து வருகிறார். இதற்கிடையில் கட்சிக்குள் ஏற்பட்ட குழப்பத்தின் காரணமாக ஓ. பன்னீர் செல்வம் அவர்களின் உயிருக்கு பாதிப்பு இருப்பதாகக் கட்சி நிர்வாகிகள் மத்திய அமைச்சகத்திடம் இருந்து ‘Y‘ பிரிவு பாதுகாப்பினைக் கேட்டுப் பெற்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

முன்பாக, மத்தியிலும் நிதிப் பற்றாக்குறையின் காரணமாகப் பாதுகாப்பு நிலைப்பாடுகளில் பல மாற்றங்களை மத்திய அரசு கொண்டுவந்துள்ளது. விளையாட்டு வீரர் சச்சின் டெண்டுல்கருக்கு வழங்கப்பட்டு வந்த பாதுகாப்பும் விலக்கப்பட்டுள்ளன என்பதும் குறிப்பிடத்தக்கது.

முதன்மை பாதுகாப்பு

பாதுகாப்பு ஏற்பாடுகளில் பிரதமருக்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கப்படுகிறது. அதே போல பிரதமரின் குடும்ப உறுப்பினர்களுக்கும் இந்தப் பாதுகாப்பு ஏற்பாடுகள் வழங்கப்படுகின்றன. அதுமட்டுமல்லாது இந்திய அரசாங்கத்தில் தலைமைப் பதவிகளில் உள்ள ஜனாதிபதி, அமைச்சர்கள், நீதிபதிகள், கவர்னர்களுக்கும் பல்வேறு குழுக்களால் பாதுகாப்புகள் உறுதிச் செய்யப்படுகின்றன.

பாதுகாப்பு குழுக்களுக்கான வித்தியாசம்

உயர்பதவி வகிப்பவர்களுக்கு வழங்கப்படுகின்ற பாதுகாப்புகள் அவர்களின் பதவியைப் பொறுத்தே அமைகின்றன. VVIP களுக்கான பாதுகாப்பு விஷயங்களில் மத்திய நிறுவனம் நேரடியாகத் தொடர்பு கொண்டிருக்கிறது. VIP களின் பாதுகாப்பு குழுக்களில் உள்ளூர் காவல் துறையுடன் வேறு பல தனியார் குழுக்களும் இடம்பெறுகின்றன.

பாதுகாப்பு ஏற்பாடுகள் பல நேரங்களில் அச்சுறுத்தலைப் பொறுத்தே வழங்கப்படுகின்றன. அதனால் சில துணை நிலையில் உள்ள பதவிகளுக்கும் பாதுகாப்புகள் வழங்கப்படுகின்றன. மத்தியப் புலனாய்வுத் துறையின் பரிந்துரையின்படி இந்தப் பாதுகாப்பு ஏற்பாடுகள் பரிசீலிக்கப்படுகின்றன எனலாம்.

VVIP பாதுகாப்பு

1981 ஆம் ஆண்டிற்கு முன்னர் வரை பிரதமரின் பாதுகாப்புத் தொடர்பான பணியினை டெல்லி காவல்துறையே கவனித்து வந்தது. 1981 க்குப் பிறகு மத்தியப் புலனாய்வு அமைப்பு, பிரதமரின் பாதுகாப்பிற்காகவே ஒரு தனிக் குழுவினை ஏற்படுத்தியது. இந்தியாவிற்கு உள்ளேயும், பிரதமர் வெளிநாடுகளுக்குப் பயணம் மேற்கொள்ளும்போதும் அவரின் பாதுகாப்பினை உறுதிசெய்ய வேண்டியது இந்தப் பாதுகாப்புக் குழுவின் கடமையாகிறது.

VVIP பாதுகாப்பு எஸ்.பி.ஜி (SPG)க்கு மாறியது

மத்திய அரசாங்கத்தின் மேம்பட்ட காவல் நிர்வாகத்திடம் இருந்து, பின்னர் எஸ்.பி.ஜி நிறுவனத்திடம் பிரதமரின் பாதுகாப்பு ஒப்படைக்கப்பட்டது. முன்னாள் பிரதமர் இந்திரா காந்தி, அவரது பணியாளர் ஒருவரால் சுட்டுக் கொல்லப்பட்ட பின்னரே பிரதமருக்கு வழங்கப்படுகின்ற பாதுகாப்பு குழுவானது மாற்றியமைக்கப்பட்டது. ஒரு நியமிக்கப்பட்ட அதிகாரி மற்றும் எஸ்.பி.ஜி நிறுவனத்தின் நேரடிக் காட்டுப்பாட்டின்கீழ் VVIP களின் பாதுகாப்பு மாறியது . இந்தியக் காவல் துறையில் பணியாற்றிa உயர் அதிகாரிகளே எஸ்பிஜி யின் இயக்குநர்களாக நியமிக்கப்படுகின்றனர். எஸ்.பி.ஜி. பாதுகாப்பு குழுவிற்கு உயர்ந்த பட்ச அதிகாரம் வழங்கப்பட்டதற்கு, முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தியின் படுகொலையும் முக்கிய காரணமாக இருந்தது எனலாம்.

முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தியின் படுகொலைக்குப் பின்னர், முன்பு பிரதமர்களாகப் பணியாற்றியவர்களுக்கும் 10 ஆண்டுகள் எஸ்.பி.ஜி பாதுகாப்பு வழங்கப்பட வேண்டும் என்று 1991 ஆம் ஆண்டு எஸ்பிஜி கொள்கைகளில் திருத்தம் கொண்டுவரப்பட்டது. பின்னர் நாடாளுமன்றத்தின் கீழ் சபையால் நவம்பர் 2019 இல் எஸ்பிஜி யின் சட்டத்தில் மாற்றங்கள் செய்யப்பட்டன. இச்சட்டத்தின்படி முன்னாள் பிரதமர்களுக்கும் அவரது உறவினர்களுக்கும் வழங்கப்பட்ட எஸ்பிஜி பாதுகாப்பு குறைக்கப்பட்டுள்ளன.



பாதுகாப்புக் குழுவில் யார் இருப்பார்கள்

பிரதமரின் பாதுகாப்புக் குழுவில் சிறப்பு பயிற்சி பெற்ற அதிகாரிகள் மற்றும் மத்திய ஆயுதப் படை (N.S.G), ரயில்வே பாதுகாப்பு படையைச் சார்ந்த ஐ.பி.எஸ் (IPS) மற்றும் ஆர்.பி.எஃப் (RBF) அதிகாரிகளாக இருப்பர். எஸ்பிஜி யின் பணியாளர்களும் பாதுகாப்பு பணிகளில் நியமிக்கப்படுவதுண்டு. VVIP களுக்கான பாதுகாப்புக் குழுவில் இடம் பெறுபவர்களை மத்தியப் புலனாய்வு அமைச்சகமும், உள்துறை செயலாளர், மற்றும் உள்துறை அமைச்சரும் முடிவு செய்கின்றனர்.

மற்ற பாதுகாப்பு குழுக்கள்

உயர்நிலையில் வழங்கப்படுகின்ற பாதுகாப்பு வசதிகள் மட்டுமல்லாது VIP பாதுகாப்புகளும் மத்திய அரசின் கட்டுப்பாட்டிலேயே வைக்கப்பட்டுள்ளன. ஆனால் பாதுகாப்பில் இடம்பெறும் அதிகாரிகள் பெரும்பாலும் உள்ளூரைச் சார்ந்தவர்களாகவே நியமிக்கப்படுகின்றனர். மத்திய அரசின் கட்டுப்பாட்டில் இப்பாதுகாப்புகள் வழங்கப்படுகின்றன என்றாலும் மாநில அரசின் கருத்துக்களும் இதில் முக்கியத்துவமுடையதாகக் கருதப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.

‘Z +’ பாதுகாப்பு இந்தியாவில் வழங்கப்படுகின்ற இரண்டாவது மிக உயர்ந்த பாதுகாப்பாகக் கருதப்படுகிறது. இது ஏறக்குறைய எஸ்.பி.ஜி (SPG) பாதுகாப்புக்கு நிகரானதாகும். இந்தப் பாதுகாப்பில் 55 பணியாளர்கள் இடம்பெறுவதோடு என்.எஸ்.ஜி கமேண்டோக்கள் மற்றும் காவல் துறையினரும் இடம் பெறுகின்றனர். சிறப்புப் பயிற்சி பெற்ற அதிகாரிகள் இக்குழுவில் இடம்பெறுவதோடு அதி நவீன எம்.பி 5 ரக துப்பாக்கிகளையும் வைத்திருப்பர்.

‘Z‘ பிரிவில் 22 பாதுகாப்பு பணியாளர்கள் இடம்பெறுகின்றனர். மேலும் தில்லி காவல் துறையிலிருந்தோ அல்லது சிர்ஆர்பிஎஃப் லிருந்தோ அதிகாரிகள் கூடுதல் பாதுகாப்பில் ஈடுபடுவர். மத்தியக் கமேண்டோ படையினர் இடம்பெறுவதால் ‘Z‘ பிரிவு பாதுகாப்பு முக்கியத்துவம் உடையதாகவே கருதப்படுகிறது.

‘Y’ பிரிவு பாதுகாப்பு 11 காவல் பணியாளர்களும் இரண்டு பி.எஸ்.ஓ. பணியாளர்களையும் உள்ளடக்கியது.

‘X’ பிரிவு பாதுகாப்பானது மிகவும் குறைந்த பாதுகாப்புக் குழுவாகும். ஒரு காவலர் அதிகாரியும் இரண்டு பாதுகாப்பு பணியார்களையும் மட்டுமே உள்ளடக்கியது இந்தப் பிரிவாகும்.

‘Z’ பிரிவு ‘Y’ பிரிவு வேறுபாடு

‘Z’ பிரிவில் மத்தியக் கமோண்டோ படையைச் சார்ந்த அதிகாரிகள் இடம்பெறுவர் என்பதால் அந்தப் பாதுகாப்பு உறுதிச் செய்யப்பட்டதாகவே கருதப்படுகிறது. இந்த அதிகாரிகள் பெரும்பாலும் சி.ஆர்.எஃப் அல்லது தில்லி காவல் துறையால் நியமிக்கப்படுகின்றனர்.

‘Y’ பிரிவு பாதுகாப்பானது இரண்டு பி.எஸ்.ஓ பணியாளர்களைக் கொண்டது என்பதால் குறைந்த பட்ச பாதுகாப்பினைக் கொண்டது எனலாம்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.