நடிகை ராஷ்மிகாவிற்கு செல்லப்பெயர் வைத்த பிரபல நடிகர்… என்ன தெரியுமா?

தென்னிந்திய சினிமாவில் முன்னணி நடிகையாக வளர்ந்துள்ள நடிகை ராஷ்மிகா மந்தனாவிற்கு இந்தியா முழுக்கவே ரசிகர்கள் இருக்கின்றனர். இந்நிலையில் நடிகை ராஷ்மிகாவிற்கு பிரபல தெலுங்கு நடிகர் அல்லு அர்ஜுன் செல்ல பெயர் வைத்துள்ளார். இந்தத் தகவல் தற்போது தெலுங்கு சினிமா வட்டாரத்தில் பெரிதும் பேசப்பட்டு வருகிறது.

அறிமுக இயக்குநர் சுகுமாறன் இயக்கத்தில் பிரபல நடிகர் அல்லு அர்ஜுன் நடிப்பில் உருவாகியுள்ள “புஷ்பா“ திரைப்படத்தில் நடிகை ராஷ்மிகா ஜோடியாக நடித்துள்ளார். இந்நிலையில் இந்தப் படத்தில் இடம்பெற்ற ஒரு பாடலுக்கு தற்போது எதிர்ப்பு கிளம்பிய நிலையில் “புஷ்பா“ திரைப்படத்திற்கு அல்லு அர்ஜுன் ரசிகர்கள் பெரும் ஆதரவு அளித்து வருகின்றனர். இதையடுத்து “புஷ்பா” திரைப்படம் நாளை ரிலீசாக உள்ளது.

இந்தத் திரைப்படத்தின் ப்ரி ரிலீஸ் விழா சமீபத்தில் நடைபெற்றது. இதில் கலந்து கொண்ட நடிகர் அல்லு அர்ஜுன் நடிகை ரஷ்மிகா மந்தனாவிற்கு இந்தியா முழுக்கவே “க்ரஷ்“ இருக்கிறது. அவரை நான் “க்ரஷ்மிகா“ என்றுதான் அழைக்கிறேன். மேலும் அவர் நல்ல திறமையான, புத்திசாலியான, அழகான நடிகை. இவருடைய வளர்ச்சி இன்னும் உயரத்திற்கு செல்ல வேண்டும் என்று பாராட்டு தெரிவித்து இருந்தார்.

மேலும் நாம் பணியாற்றும் போது ஒரு சிலரிடம் மட்டும் நமக்கு இனம் புரியாத அன்பு ஏற்படும். அப்படி ஒருவர்தான் ராஷ்மிகா எனவும் கூறியிருந்தார். இந்த நிகழ்வை அடுத்து நடிகை ரஷ்மிகாவின் ரசிகர்கள் பலரும் அவரை “க்ரஷ்மிகா“ என்றே அழைத்து வருகின்றனர்.

More News

இந்தியாவில் 100- ஐ தாண்டிய ஒமைக்ரான் பாதிப்பு!

இந்தியாவில் இதுவரை 101 பேருக்கு ஒமைக்ரான் வகை வைரஸ் பாதிப்பு ஏற்பட்டு இருப்பதாக மத்தியச் சுகாதாரத்துறை

முதலமைச்சரிடம் ஆசி பெற்ற சந்தானம்: கோரிக்கையை ஏற்று உறுதிமொழி அளித்ததாக தகவல்!

நடிகர் சந்தானம் சமீபத்தில் புதுவை முதல் அமைச்சரை சந்தித்து ஆசி பெற்ற நிலையில் அவருக்கு உறுதிமொழியை முதலமைச்சர் ரங்கசாமி அளித்து இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.

மிஸ் யுனிவர்ஸ் பெயரில் போலி கணக்கு: வெரிஃபைடு கொடுத்த டுவிட்டரால் பரபரப்பு!

20 ஆண்டுகளுக்கு பின்னர் இந்திய அழகி ஒருவர் மிஸ் யுனிவர்ஸ் பட்டத்தை வென்ற நிலையில் அவரது பெயரில் ஆரம்பிக்கப்பட்ட போலி டுவிட்டர் கணக்கிற்கு வெரிஃபைட் கொடுக்கப்பட்டுள்ளதால்

'ஸ்பைடர்மேன்' முதல் நாள் இந்திய வசூல் இத்தனை கோடியா?

பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்திய 'ஸ்பைடர்மேன்' திரைப்படம் நேற்று வெளியான நிலையில் இந்த படத்தின் முதல் நாள் இந்திய வசூல் இந்திய திரையுலகினருக்கு பெரும் ஆச்சரியத்தை அளித்துள்ளது என்பது

'வலிமை' திரைப்படத்தின் ரிலீஸ் உரிமையை பெற்ற நிறுவனம்: அதிகாரபூர்வ அறிவிப்பு!

அஜித் நடித்த 'வலிமை' திரைப்படம் வரும் பொங்கல் தினத்தில் உலகம் முழுவதும் பிரமாண்டமாக திரையரங்குகளில் வெளியாக உள்ளது என்பதும் இந்த படத்திற்காக இரண்டு வருடங்கள் காத்திருந்த