அல்லு அர்ஜூனின் 'புஷ்பா 2' ரிலீஸ் எப்போது?

  • IndiaGlitz, [Saturday,January 22 2022]

பிரபல தெலுங்கு நடிகர் அல்லு அர்ஜுன் நடித்த ‘புஷ்பா’ திரைப்படம் கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் வெளியானது என்பதும் இந்த படம் தமிழ் உள்பட கிட்டத்தட்ட அனைத்து இந்திய மொழிகளிலும் வெளியாகி மிகப்பெரிய வரவேற்பைப் பெற்றது என்பது குறிப்பிடத்தக்கது. திரையரங்குகளில் மட்டும் ‘புஷ்பா’ படம் 350 கோடி ரூபாய் வசூல் செய்ததாகவும் இதனை அடுத்து ஓடிடியிலும் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.

இந்த நிலையில் ‘புஷ்பா’ படத்தின் முதல் பாகத்தில் கிடைத்த வரவேற்பை அடுத்து இந்த படத்தின் இரண்டாம் பாகத்திற்கு மிகப்பெரிய எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது. இந்த நிலையில் ‘புஷ்பா’ இரண்டாம் பாகத்தின் படப்பிடிப்பு வரும் மார்ச் மாதம் தொடங்க இருப்பதாகவும் முதல் பாகத்தில் நடித்த அல்லு அர்ஜுன், ராஷ்மிகா மந்தனா, பகத் பாசில் தவிர வேறு சில முக்கிய நடிகர்களும் இந்த இரண்டாம் பாகத்தில் இணைய உள்ளதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளது.

மேலும் ‘புஷ்பா’ படத்தின் இரண்டாம் பாகத்தின் படப்பிடிப்பை விறுவிறுப்பாக நடத்தி இந்த ஆண்டே ரிலீஸ் செய்யவும் படக்குழு திட்டமிட்டுள்ளது. முதல் பாகம் போலவே இரண்டாம் பாகமும் வசூலில் சாதனை செய்யும் என எதிர்பார்க்கப்படுகிறது.

More News

நீண்ட இடைவெளிக்கு பின் மீண்டும் கேமிரா முன் வந்த மேக்னாராஜ்: வைரல் வீடியோ

கன்னட நடிகை மேக்னா ராஜின் கணவரும், கன்னட நடிகருமான சிரஞ்சீவி சார்ஜா கடந்த 2020 ஆம் ஆண்டு ஜூன் 7ஆம் திடீரென மாரடைப்பால் மரணமடைந்தார் என்பதும் அதன் பின்னர் நடிகை மேக்னாராஜுக்கு

அருவி இயக்குனர் அருண்பிரபுவுக்கு திருமணம்: மணப்பெண் யார் தெரியுமா?

கடந்த 2017 ஆம் ஆண்டு வெளியான 'அருவி' என்ற திரைப்படத்தை இயக்கிய இயக்குனர் அருண் பிரபு புருஷோத்தமன் திருமணம் நேற்று நடந்துள்ளதை அடுத்து அவருக்கு ரசிகர்கள் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

செல்ல மகளுக்கு அழகு தமிழ் கற்றுக்கொடுக்கும் கன்னட நடிகர்… வைரலாகும் வீடியோ!

இந்தியா சினிமாவில் ராக்கிங் ஸ்டார் என்று செல்லமாக அழைக்கப்படும்

குழந்தைகளுக்கான ஒமிக்ரான் அறிகுறிகள்… எச்சரிக்கை தகவல்!

இந்தியாவில் கொரோனா நோய்த்தொற்றின் 3 ஆவது அலைத்தாக்கம்

'குக் வித் கோமாளி 3' ஆரம்பமே அமர்க்களம்: பரத்தை விரட்டி விரட்டி அடிக்கும் வெங்கடேஷ் பட்

'குக் வித் கோமாளி சீசன் 1 மற்றும் 2 ஆகிய இரண்டுமே பார்வையாளர்கள் மத்தியில் மிகப்பெரிய வரவேற்பை பெற்ற நிலையில் இன்று முதல் சீசன் 3 ஆரம்பமாக உள்ளது என்பதும் இந்த சீசனுக்கு மிகப்பெரிய எதிர்பார்ப்பு