நள்ளிரவில் வீடு திரும்ப 'Zomato'வை பயன்படுத்திய இளைஞர்

  • IndiaGlitz, [Saturday,August 17 2019]

நள்ளிரவு நேரத்தில் வேலை முடித்து வீடு திரும்ப முடிவு செய்த ஒரு இளைஞர் கேப்-இல் சென்றால் அதிக பணம் செலவாகும் என்பதால் சமயோசிதமாக 'Zomato'வை பயன்படுத்தியுள்ள சம்பவம் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது

ஐதராபாத்தை பகுதியை சேர்ந்த உபேஷ் என்ற என்ற இளைஞர் தனது பணி முடிந்ததும் வீடு திரும்ப முடிவு செய்து ஒரு தனியார் கேப் நிறுவனத்தை அணுகி உள்ளார். ஆனால் அதில் ரூபாய் ரூ.300 ஆகும் என காட்டியது. இந்த நிலையில் அவருக்கு திடீரென ஒரு யோசனை தோன்றியுள்ளது. மிகுந்த பசியில் இருந்த அந்த இளைஞர் தான் இருக்கும் இடத்தின் அருகில் உள்ள ஒரு ஓட்டலில் ஒரு முட்டை தோசை ஆர்டர் செய்தார். அதை தனது வீட்டில் டெலிவரி செய்யும்படி அவர் கேட்டுக்கொண்டார்.

அந்த தோசையை வாங்க வந்த zomato ஊழியரிடம் 'நான் தான் அந்த உணவை ஆர்டர் செய்தேன் என்றும், தன்னை வீட்டிற்கு அவரது இருசக்கர வாகனத்தில் அழைத்து செல்லுங்கள் என்றும் கேட்டுக்கொண்டுள்ளார். உடனே அந்த ஊழியரும் ஒப்புக்கொண்டதை அடுத்து ஒரு பைசா செலவில்லாமல் zomato ஊழியருடன் வீட்டுக்கு வந்துள்ளார். இதற்கு உதவியாக அந்த ஊழியரின் சேவைக்கு ஃபைவ் ஸ்டார் ரேட்டிங் அளித்துள்ளார். இந்த சம்பவத்தை அந்த நபர் தனது சமூக வலைத்தளத்தில் பதிவு செய்ய இந்த பதிவு தற்போது வைரலாகியுள்ளது

More News

கேப்டன் டாஸ்க்கில் மதுமிதா செய்த தில்லாலங்கடி வேலைகள்!

பிக்பாஸ் நிகழ்ச்சியில் நேற்றைய கேப்டன் டாஸ்க்கில் மதுமிதா, ஷெரின், தர்ஷன் ஆகிய மூவர் போட்டியிட்டனர். இந்த டாஸ்க்கில் கண்ணை கட்டிக்கொண்டு அவரவர்களுக்கு

அஜித், விஜய் வசனங்களை மெசேஜ் ஆக கூறிய கவின், லாஸ்லியா

பிக்பாஸ் வீட்டின் நேற்றைய நிகழ்ச்சியில் போட்டியாளர்கள் ஒவ்வொருவரும் ஒரு மெசேஜ் சொல்ல வேண்டும் என்று ஒரு டாஸ்க் கொடுக்கப்பட்டது

ஜெயம் ரவியின் அடுத்த பட டைட்டிலில் தேசியப்பற்று!

ஜெயம் ரவி நடித்த 'கோமாளி' திரைப்படம் நேற்று வெளியாகி ஊடகங்கள் மற்றும் சமூக வலைத்தலை பயனாளிகளின் பாசிட்டிவ் விமர்சனங்களை பெற்ற நிலையில், ரிலீஸ் ஆன அனைத்து திரையரங்குகளிலும்

துருவ் விக்ரம் பாடிய 'ஆதித்ய வர்மா' பாடல் வரிகள்

துருவ் விக்ரம் நடித்த 'ஆதித்ய வர்மா' திரைப்படம் விரைவில் வெளியாகவிருக்கும் நிலையில் அவர் இந்த படத்திற்காக பாடிய 'எதற்கடி வலி தந்தாய்' என்ற பாடல் சற்றுமுன் வெளியாகியுள்ளது.

ஆர்யாவின் வெற்றிக்காக வாழ்த்திய சூர்யா!

நடிகர் ஆர்யா ஒரு நடிகர் மட்டுமின்றி ஒரு சைக்கிள் ரைடர் என்பதும், தேசிய அளவில் பல்வேறு சைக்கிள் போட்டிகளில் அவர் பங்கேற்றுள்ளார் என்பதும் தெரிந்ததே