விஜய்யின் 'மாஸ்டருக்கு' முன்பே வெளியான 'மாஸ்டர்கள்'

  • IndiaGlitz, [Tuesday,December 31 2019]

தளபதி விஜய் நடிப்பில் இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவாகிவரும் திரைப்படத்தின் டைட்டில் ’மாஸ்டர்’ என இன்று மாலை அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டது என்பதை ஏற்கனவே பார்த்தோம். இந்த நிலையில் ’மாஸ்டர்’ என்ற டைட்டிலில் ஏற்கனவே மூன்று படங்கள் வெளியாகி உள்ளது தெரிய வந்துள்ளது. அவை ஒரு ஆங்கிலபடம், ஒரு மலையாளப் படம், ஒரு தெலுங்குப் படம் என்பது குறிப்பிடத்தகக்து.

கடந்த 1997ஆம் ஆண்டு சிரஞ்சீவி நடித்த மாஸ்டர் என்ற திரைப்படம் தெலுங்கில் வெளியாகியுள்ளது. அதேபோல் 2012ஆம் ஆண்டு சசிகுமார் மற்றும் பிரத்விராஜ் நடிப்பில் ’மாஸ்டர்’ என்ற திரைப்படம் வெளியாகி உள்ளது. அதே ஆண்டில் ’தி மாஸ்டர்’ என்ற டைட்டிலில் ஒரு ஆங்கில படம் ஒன்று வெளியாகியுள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது.

எனவே விஜய்யின் ’மாஸ்டர்’ படத்திற்கு முன்னரே மாஸ்டர் என்ற டைட்டில் மேற்கண்ட மூன்று படங்களும் வெற்றி உள்ளது என்பதும் இந்த மூன்று படங்களும் நல்ல வெற்றியை பெற்றுள்ளது என்பதும் கூடுதல் தகவல். இதேபோல் விஜய்யின் ’மாஸ்டர்’ திரைப்படமும் சூப்பர் ஹிட்டாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

More News

இத்தனைபேர் இருக்க எனக்கென்ன மனக்கவலை...? வைரமுத்து டுவீட்

சமீபத்தில் சென்னையில் உள்ள தனியார் பல்கலைக் கழகம் ஒன்று கவியரசு வைரமுத்து அவர்களுக்கு டாக்டர் பட்டம் வழங்க இருப்பதாக அறிவித்தது.

கொள்ளையடித்ததில் ரூ.20 லட்சம், போலீசாருக்கு லஞ்சமாக கொடுத்தேன்..! வங்கிக் கொள்ளையன் வாக்குமூலம்.

சுமார் 20 லட்ச ரூபாயை 2 போலீஸ்காரர்களுக்கு லஞ்சமாக கொடுத்ததாக கொள்ளையன் அளித்த வாக்குமூலத்தின் அடிப்படையில் சம்பந்தபட்ட 2 போலீசாருக்கு சம்மன் அனுப்பப்பட்டுள்ளது.

பெண்களின் ஆடைகளை மட்டும் திருடும் அரைநிர்வாண மர்ம நபர் யார்? சென்னையில் பரபரப்பு!

சென்னையில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பு ஒன்றில் அரை நிர்வாண மர்ம மனிதன் ஒருவன் பெண்களின் ஆடைகளை மட்டும் குறிவைத்து திருடி சென்றுள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது

'மாஸ்டர்' ஃபர்ஸ்ட்லுக்கை பார்க்க திரையரங்கில் குவிந்த ரசிகர்கள்

தளபதி விஜய் நடித்து வரும் 64வது படத்திற்கு 'மாஸ்டர்' என்ற மாஸ் டைட்டில் வைக்கப்பட்ட தகவலை சற்றுமுன் பார்த்தோம்.

கலாபவன் மணியின் மரணத்திற்கு காரணம் என்ன? சிபிஐ அறிக்கை தாக்கல்

பிரபல தமிழ் மற்றும் மலையாள நடிகர் கலாபவன் மணி கடந்த 2016ஆம் ஆண்டு அவருடைய பண்ணை வீட்டில் மர்மமான முறையில் மரணமடைந்தார். அவர் விஷம் கொடுத்து கொல்லப்பட்டிருக்கலாம்