இதுவொரு சைலண்ட் செல்பி: க்யூட் குழந்தையுடன் ஆல்யா மானசா
தனியார் தொலைக்காட்சி ஒன்றில் ’ராஜா ராணி’ என்ற தொலைக்காட்சித் தொடர் மூலம் புகழ்பெற்று லட்சக்கணக்கான ரசிகர்களை பெற்ற நடிகை ஆல்யா மானசா அந்த தொடரின் நாயகன் சஞ்சீவ் கார்த்திக்கை காதலித்து சமீபத்தில் திருமணம் செய்து கொண்டார் என்பதும் இந்த நட்சத்திர தம்பதிக்கு சமீபத்தில் அழகான பெண் குழந்தை பிறந்தது என்பது தெரிந்ததே.
இந்த லாக்டவுன் விடுமுறையில் குழந்தையுடன் கூடிய புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை ஆல்யா மானசா தனது சமூக வலைத்தளத்தில் அவ்வப்போது வெளியிட்டு ரசிகர்களின் பாராட்டுக்களைப் பெற்று வருவது தெரிந்ததே.
இந்த நிலையில் தனது குழந்தையுடன் கூடிய ஒரு செல்பி புகைப்படத்தை தற்போது பதிவு செய்திருக்கும் ஆல்யா மானசா, ‘மகளுடன் நான் எடுத்து கொண்ட சைலண்ட் செல்பி இது’ என்று பதிவு செய்துள்ளார். இந்த செல்பி புகைப்படம் தற்போது இணையதளங்களில் வைரலாகி வருகிறது.