மாணவ மாணவிகளுடன் செம்ம ஆட்டம் போட்ட அமலாபால்.. கூறிய முக்கிய அறிவுரை என்ன தெரியுமா?


Send us your feedback to audioarticles@vaarta.com


நடிகை அமலாபால் நேற்று ஒரு தனியார் கல்லூரியில் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார். அப்போது மாணவ மாணவியுடன் சேர்ந்து செம ஆட்டம் போட்ட காட்சிகள் மற்றும் மாணவர்களுக்கு அறிவுரை வழங்கிய வீடியோ காட்சிகள் அவரது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிடப்பட்டுள்ளன. இந்த வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.
தமிழ் மற்றும் மலையாள திரையுலகின் முன்னணி நடிகையாக இருந்த அமலா பால், திருமணத்திற்குப் பின்னர் நடிப்பை குறைத்துக் கொண்டார். மேலும், சமீபத்தில் அவர் குழந்தை பெற்றதும், எந்த புதிய படத்திலும் நடிக்க ஒப்பந்தமாகவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது. இருப்பினும், தற்போது ஒரு மலையாளப் படத்தில் மட்டுமே நடித்து வருகிறார்.
இன்ஸ்டாகிராமில் ஆக்டிவாக உள்ள அமலாபாலுக்கு 5 மில்லியனைத் தாண்டும் பின்தொடர்பவர்கள் உள்ளனர். தனது பின்தொடர்பவர்களை மகிழ்விப்பதற்காக அடிக்கடி புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை பதிவிடுகிறார்.
இந்த வகையில், சமீபத்தில் அவர் தனியார் கல்லூரியின் ஸ்போர்ட்ஸ் டே நிகழ்ச்சியில் கலந்து கொண்டபோது மாணவர்கள் அவரை உற்சாகமாக வரவேற்றனர். நிகழ்ச்சி முடிவில் மாணவ மாணவியுடன் இணைந்து ஆட்டம் போட்ட அமலா பால், Please value your peace of mind என அறிவுரையும் கூறியுள்ளார். அந்த வீடியோவை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். தற்போது அந்த வீடியோ சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
-
Aadhira Palani
Contact at support@indiaglitz.com
Comments