அமலாபாலின் 'அதோ அந்த பறவை போல' ரிலீஸ் தேதி அறிவிப்பு!

  • IndiaGlitz, [Sunday,January 26 2020]

 

அமலாபால் நடித்த ’அதோ அந்த பறவை போல’ திரைப்படத்தின் டிரைலர் சமீபத்தில் வெளியாகி மிகப்பெரிய வரவேற்பைப் பெற்றது. நாயகிக்கு முக்கியத்துவம் கொடுக்கப்பட்டுள்ள இந்த படத்தில் அமலாபால் ரிஸ்க் எடுத்து டூப் இல்லாமல் சண்டை காட்சியில் நடித்தது, தற்காப்பு கலை ஒன்றை இதற்காக அவர் பயிற்சி பெற்றதும் பரபரப்பாக பேசப்பட்டடு. எனவே இந்த படம் அமலாபால் திரையுலக வாழ்வில் ஒரு முக்கிய திரைப்படமாக இருக்கும் என கருதப்பட்டது

இந்த நிலையில் இந்த படம் இம்மாத இறுதியில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் தற்போது பிப்ரவரி 14 ஆம் தேதி அதாவது காதலர் தினத்தில் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் ரிலீஸ் தேதியுடன் கூடிய ஒரு புதிய போஸ்டரையும் படக்குழுவினர் வெளியிட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது

ஏற்கனவே அதே பிப்ரவரி 14ஆம் தேதி ஹிப் ஹாப் தமிழாவின் ’நான் சிரித்தால்’ அசோக் செல்வனின் ’ஓ மை கடவுளே’ ஆகிய திரைப்படங்கள் ரிலீஸாக உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது

அமலாபால், ஆசிஷ் வித்யார்த்தி, சமீர் கோச்சார் உள்பட பலர் நடித்துள்ள இந்த படத்தை வினோத் இயக்கியுள்ளார். ஜேக்ஸ் பிஜாய் இசையில், சாந்தகுமார் ஒளிப்பதிவில் ஜான் ஆபிரஹாம் படத்தொகுப்பில் உருவாகியுள்ள இந்த படத்தை ஜோன்ஸ் என்பவர் தயாரித்துள்ளார்.

More News

த்ரிஷாவின் அடுத்த படத்தின் உரிமையை வாங்கிய சென்னை பிரபலம்!

கடந்த 20 வருடங்களாக தமிழ் திரையுலகில் முன்னணி நடிகையாக நடித்து வரும் த்ரிஷா நடிப்பில் உருவான 'பரமபதம் விளையாட்டு' திரைப்படம் கடந்த சில வருடங்களுக்கு முன்பே ரிலீசுக்கு தயாராகி விட்டது

வேலுபிரபாகரனுக்கு ரஜினி உதவியது உண்மையா? இதோ ஒரு விளக்கம்

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்கள் சமீபத்தில் பெரியார் குறித்து சர்ச்சைக்குரிய வகையில் பேசியதாக அனைத்து அரசியல் தலைவர்களும் குற்றம்சாட்டிய நிலையில்

பா ரஞ்சித் படத்தில் மகிழ்திருமேனி நடிக்கிறாரா? பரபரப்பு தகவல் 

மகிழ்திருமேனி இயக்கத்தில் சமீபத்தில் வெளியான 'தடம்' என்ற திரைப்படம் சூப்பர்ஹிட் ஆன நிலையில் அடுத்ததாக உதயநிதி ஸ்டாலின் நடிக்கும் படம் ஒன்றை மகிழ்திருமேனி இயக்க உள்ளதாக கூறப்படுகிறது.

கருணாநிதி வாழ்க்கை வரலாறு படத்தில் நடிக்க இல்லை: உதயநிதி 

முன்னாள் தமிழக முதல்வர் ஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாறு திரைப்படமான 'தலைவி; திரைப்படம் உருவாகி வருகிறது என்பதும் அவருடைய வாழ்க்கை வரலாறு தொலைக்காட்சி

3,000 ஆண்டு பழமை வாய்ந்த எகிப்து மம்மியின் குரல் செயற்கையாக உருவாக்கம் – விஞ்ஞானிகள் மகிழ்ச்சி

3.000 ஆண்டு பழமையான ஒரு எகிப்து மதக் குருவின் 'குரல்' விஞ்ஞானிகளின் முயற்சியால் செயற்கையாக உருவாக்கப் பட்டுள்ளது.