4 எலும்பு கிடைச்சா போதும், அதை வச்சு ஜாதகத்தையே எழுதிடுவேன்: அமலாபாலின் 'கடாவர்' டிரைலர்

  • IndiaGlitz, [Saturday,July 30 2022]

நடிகை அமலாபால் நடித்த ‘கடாவர்’ என்ற திரைப்படம் நேரடியாக ஹாட்ஸ்டார் ஓடிடியில் ரிலீசாக இருப்பதாக வெளிவந்த செய்தியை ஏற்கனவே பார்த்தோம். இந்த நிலையில் இந்த படத்தின் டிரைலர் சற்று முன் வெளியாகி இணையதளங்களில் வைரலாகி வருகிறது.

அமலாபால் நடித்து தயாரித்துள்ள ‘கடாவர்’ படம் ஒரு திகில் கதையம்சம் கொண்டது என்றும் ஒரு பிணத்தை பிரேத பரிசோதனை செய்வதன் மூலம் அந்த பிணத்தின் ஜாதகத்தையே கண்டறியும் அதிகாரியாக அமலாபால் நடித்திருக்கிறார் என்றும் இந்த ட்ரெய்லரில் இருந்து தெரியவருகிறது.

அதிரடி ஆக்ஷன் மற்றும் திரில்லர் கதையம்சம் கொண்ட இந்த படம், டிரைலரின் ரிலீசுக்கு பின்னர் நல்ல எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. அனு பணிக்கர் இயக்கத்தில் உருவாகிய இந்த படத்தில் ஹரிஷ் உத்தமன், அதுல்யா ரவி, ரித்விகா உள்பட பலர் நடித்துள்ளனர். ரஞ்சின் ராஜ் இசையில் அரவிந்த் சிங் ஒளிப்பதிவில் சான் லோகேஷ் படத்தொகுப்பில் உருவாகியுள்ள இந்த படம் ஆகஸ்ட் 12-ஆம் தேதி ஹாட்ஸ்டார் ஓடிடியில் நேரடியாக ரிலீஸாகவுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

More News

இந்த இயக்குனர் என் படத்தை பாராட்ட வேண்டும்: இளம் இயக்குனர் குறித்து பாரதிராஜா

இந்த இளம் இயக்குனர் என்னைப் பாராட்டும் அளவுக்கு ஒரு திரைப்படத்தை உருவாக்க வேண்டும் என்று எனக்கு ஆசை என இயக்குனர் இமயம் பாரதிராஜா தெரிவித்துள்ளார். 

விஜய்யின் 'வாரிசு' ஒரு ஃபேமிலி சப்ஜெக்ட் படமா? சரத்குமார் வெளியிட்ட ஆச்சரிய தகவல்!

தளபதி விஜய் நடித்து வரும் 'வாரிசு' திரைப்படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில் இந்த படம் குறித்து நடிகர் சரத்குமார் கூறிய தகவல் இணையதளங்களில் வைரலாகி வருகிறது. 

'பொன்னியின் செல்வன்' பர்ஸ்ட்சிங்கிள் பாடல்: பாடகர், பாடலாசிரியர் பெயர்கள் இதோ!

பிரமாண்ட இயக்குனர் மணிரத்னம் இயக்கத்தில் உருவாகியிருக்கும் 'பொன்னியின் செல்வன்' திரைப்படம் செப்டம்பர் 30ஆம் தேதி தமிழ் உள்பட ஐந்து மொழிகளில் வெளியாக இருக்கும் நிலையில்

ஒரே ஒரு தமிழ் படத்தில் நடிக்க நடிகைக்கு நயன்தாராவை விட 4 மடங்கு சம்பளமா?

'தி லெஜண்ட்'திரைப்படத்தில் நடித்த நடிகைக்கு நயன்தாராவை விட நான்கு மடங்கு சம்பளம் வாங்கி இருப்பதாக செய்திகள் வெளியாகி இருப்பது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

தந்தையின் 70வது பிறந்த நாளை வித்தியாசமாக கொண்டாடிய புன்னகை அரசி நடிகை!

தமிழ் திரையுலகின் புன்னகை அரசி என்று போற்றப்படும் நடிகை சினேகா தனது தந்தையின் 70வது பிறந்த நாள் கொண்டாட்டம் குறித்த புகைப்படங்களை தனது சமூக வலைத்தளத்தில் வெளியிட்டுள்ள