திடீரென நடுகாட்டிற்கு சென்று குதித்து விளையாடும் அமலாபால்.. என்ன ஆச்சு?

  • IndiaGlitz, [Monday,May 06 2024]

நடிகை அமலாபால் தற்போது நிறைமாத கர்ப்பிணியாக இருக்கும் நிலையில் திடீரென நடுக்காட்டில் குதித்து விளையாடிய வீடியோவை பதிவு செய்துள்ள நிலையில் அந்த வீடியோ தற்போது இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.

நடிகை அமலாபால் கடந்த ஆண்டு தனது காதலரான தேசாய் என்பவரை திருமணம் செய்து கொண்ட நிலையில் அவர் கர்ப்பமானார் என்பதும் தற்போது அவர் நிறைமாத கர்ப்பிணியாக இருப்பதால் எந்த நேரமும் அவருக்கு குழந்தை பிறக்கும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த நிலையில் கர்ப்பமான நேரத்தில் கூட அவர் சில போட்டோஷூட் புகைப்படங்களை பதிவு செய்து வருகிறார் என்பதும் அது மட்டும் இன்றி அவர் நடித்த ’ஆடுஜீவிதம்’ படத்தின் ப்ரோமோஷன் பணிகளுக்கும் தவறாமல் சென்று வந்தார் என்பதும் அது குறித்த புகைப்படங்கள் வீடியோக்கள் இணையத்தில் வைரலானது என்பதையும் பார்த்தோம்.

இந்த நிலையில் சற்று முன் அவர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தனது சகோதரரின் பிறந்த நாளை முன்னிட்டு அவர் சகோதரருடன் காட்டில் குதித்து விளையாடிய வீடியோவை வெளியிட்டுள்ள நிலையில் அந்த வீடியோ தற்போது இணையத்தில் நேரலை வருகிறது.

கடந்த சில மாதங்களுக்கு முன்பு சகோதரருடன் அவர் நடு காட்டிற்கு சென்று சந்தோஷமாக விளையாடிய வீடியோவை தான் அவர் தற்போது வெளியிட்டு தனது சகோதரருக்கு பிறந்தநாள் வாழ்த்துக்கள் தெரிவித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. இதனை அடுத்து அமலாபால் ரசிகர்களும் அவரது சகோதரருக்கு பிறந்தநாள் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

More News

டெல்லியில் 'தக்லைஃப்' படப்பிடிப்பு.. கமல்ஹாசனுடன் யார் யார்? இன்று ஒரு சர்ப்ரைஸ் இருக்குது..!

உலகநாயகன் கமல்ஹாசன் நடிப்பில், மணிரத்னம் இயக்கத்தில் உருவாகி வரும் 'தக்லைஃப்' படத்தின் படப்பிடிப்பு கடந்த சில வாரங்களாக நடைபெற்று வரும் நிலையில் தற்போது டெல்லியில்

த்ரிஷா பிறந்த நாளில் கீர்த்தி சுரேஷ் செய்த தரமான சம்பவம்.. வைரல் வீடியோ..

நடிகை த்ரிஷா பிறந்த நாளில் கீர்த்தி சுரேஷ் செய்த தரமான சம்பவம் குறித்த வீடியோ அவரது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவு செய்யப்பட்டுள்ள நிலையில் அந்த வீடியோ தற்போது இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.

குமரிமுத்து பேட்டியின் வீடியோவை வெளியிட்ட ஏ.ஆர்.ரஹ்மான்.. என்ன சொல்ல வருகிறார்?

மறைந்த நகைச்சுவை நடிகர் குமரிமுத்து அளித்த பேட்டியின் வீடியோவை தனது எக்ஸ் தளத்தில் இசைப்புயல் ஏ.ஆர்.ரகுமான் வெளியிட்ட நிலையில் இந்த வீடியோ மூலம் அவர் என்ன சொல்ல வருகிறார்

'தல ரஜினி இன்னும் மாறவே இல்லை.. ரஜினி எப்போ 'தல' ஆனார்.. பிரபலத்தின் பதிவு..!

'தல ரஜினிகாந்த் இன்னும் மாறவே இல்லை என்றும் அவர் கிரேட்டஸ்ட் நபர்' என்று பிரபலம் ஒருவர் தான் அது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவு செய்துள்ள நிலையில் 'ரஜினி எப்போ தல ஆனார்' என்று ரசிகர்கள் கேள்வி

'நடக்க வேண்டிய நேரத்துல கரெக்டா நடக்கும்.. ரஜினியின் 'கூலி' படத்தின் மாஸ் அப்டேட்..!

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிக்க இருக்கும் 'கூலி' படத்தின் படப்பிடிப்பு விரைவில் தொடங்கும் என்று எதிர்பார்க்கப்படும் நிலையில் இந்த படத்தில் முக்கிய பணியாற்றும் ஒருவர் மாஸ் அப்டேட் கொடுத்த