close
Choose your channels

அம்மாவின் பிறந்த நாளில் அமலாபால் செய்த வேலையை பாருங்க.. வைரல் வீடியோ..!

Monday, March 6, 2023 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

நடிகை அமலாபால் தனது அம்மாவின் பிறந்தநாளை முன்னிட்டு செய்த செயலின் வீடியோ இணையதளங்களில் வைரலாகி வருகிறது.

‘சிந்து சமவெளி’ என்ற திரைப்படத்தின் மூலம் தமிழ் திரை உலகில் அறிமுகமானவர் நடிகை அமலாபால். அதன் பிறகு அவர் ’மைனா’ ’தெய்வ திருமகள்’ ’வேட்டை’ உள்ளிட்ட பல படங்களில் நடித்தார் என்பதும் விஜய் நடித்த ’தலைவா’ திரைப்படத்திலும் நாயகியாக நடித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் நடிகை அமலா பால் தனது தாயார் பிறந்த நாளை முன்னிட்டு அவருடைய நினைவாக மரம் ஒன்றை நட்டுள்ளார். இது குறித்த வீடியோவை அவர் தனது இன்ஸ்டாகிராமில் பதிவு செய்து தனது அம்மாவின் பிறந்தநாளில் அவரது அருகில் இருக்க முடியாவிட்டாலும் அவரது நினைவாக இந்த மரத்தை நடுவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

மேலும் தனது அம்மாவை தான் மிகவும் நேசிப்பதாகவும் அவருக்கு தனது இனிமையான வாழ்த்துக்களை தெரிவித்து கொள்வதாகவும் அவர் அதில் தெரிவித்துள்ளார். இது குறித்த வீடியோவை அமலா பால் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவு செய்துள்ள நிலையில் அந்த பதிவு வைரலாகி வருவதோடு அவரது அம்மாவுக்கு ரசிகர்கள் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.