தனுஷ் படத்தில் இணைந்த அமலாபால்!

  • IndiaGlitz, [Saturday,February 01 2020]

தனுஷ் மற்றும் அமலாபால் இணைந்து ’வேலையில்லா பட்டதாரி’ மற்றும் ’வேலையில்லா பட்டதாரி 2’ ஆகிய படங்களில் நடித்துள்ள நிலையில் தற்போது தனுஷின் ரீமேக் படம் ஒன்றில் அமலாபால் முக்கிய வேடத்தில் நடிக்கவிருப்பதாக செய்திகள் வெளிவந்துள்ளது.

தனுஷ் நடிப்பில் வெற்றிமாறன் இயக்கத்தில் ஜிவி பிரகாஷின் இசையில் கடந்த ஆண்டு வெளிவந்த வெற்றி படங்களில் ஒன்று அசுரன். இந்த படத்தின் தெலுங்கு ரீமேக் பணிகள் நடைபெற்று வருவது தெரிந்ததே. தனுஷ் கேரக்டரில் வெங்கடேஷ், மஞ்சு வாரியர் கேரக்டரில் ப்ரியாமணி நடித்து வரும் நிலையில் தற்போது ’அசுரன்’ படத்தில் முக்கிய கேரக்டர் ஒன்றில் மிகவும் சிறப்பாக நடித்த அம்மு அபிராமி கேரக்டரில் அமலாபால் நடிக்க இருப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளது இதுகுறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என தெரிகிறது.

’நாரப்பா’ என்ற டைட்டில் வைக்கப்பட்டுள்ள இந்த படத்தில் அமலாபால் இணைந்துள்ளதை அடுத்து இந்த படத்திற்கு ஏற்பட்ட எதிர்பார்ப்பு அதிகரித்து உள்ளதாக தெலுங்கு சினிமா வட்டாரங்கள் கூறுகின்றன.இந்த படத்தின் பர்ஸ்ட் லுக் சமீபத்தில் வெளிவந்து இணையதளங்களில் பெரும் வரவேற்பை பெற்றது என்பது குறிப்பிடத்தக்கது.

More News

சிம்பு-வெங்கட்பிரபு மீண்டும் இணையும் படம் குறித்த தகவல்!

சிம்பு நடிப்பில் வெங்கட்பிரபு இயக்கத்தில் சுரேஷ் காமாட்சி தயாரிப்பில் உருவாகவுள்ள 'மாநாடு' திரைப்படத்தின் படப்பிடிப்பு இம்மாதம் தொடங்க உள்ளது.

கொழுந்தியாள் ஆபாச படத்தை வைத்து மனைவியை மிரட்டிய கணவர்: சென்னையில் பரபரப்பு

சென்னையைச் சேர்ந்த ஒருவர் தனது கொழுந்தியாள் ஆபாச படத்தை வைத்து மனைவியை மிரட்டியதாக வெளிவந்துள்ள செய்தி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது 

மொபைல் போன், கம்யூட்டர்களையும் தாக்கும் கொரோனா வைரஸ்

சீனாவில் பரவி வரும் கொரோனா வைரசால் 200க்கும் அதிகமானோர் பலியாகி உள்ளதாகவும் இரண்டாயிரத்துக்கும் அதிகமானோர் இந்த வைரசால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருவதாகவும்

டப்பிங் சங்க தேர்தல்: சின்மயி அணியில் இணைந்த நாசர்!

டப்பிங் யூனியன் சங்கத்திற்கு வரும் பிப்ரவரி 15ஆம் தேதி தேர்தல் நடைபெற உள்ளது. இந்த தேர்தலில் ராதாரவி அணி மற்றும் சின்மயி தலைமையிலான

'நாடோடிகள் 2' படம் ரிலீஸ் குறித்த முக்கிய அறிவிப்பு!

சசிகுமார், அஞ்சலி நடிப்பில் இயக்குனர் சமுத்திரக்கனி இயக்கத்தில் உருவாகிய 'நாடோடிகள் 2' என்ற திரைப்படம் நேற்று வெளியாக இருந்த நிலையில் திடீரென