கர்ப்ப நேரத்தில் இதையெல்லாம் செய்வது மகிழ்ச்சியாக உள்ளது. அமலாபால் வெளியிட்ட வீடியோ.

  • IndiaGlitz, [Sunday,January 28 2024]

நடிகை அமலாபால் சமீபத்தில் தான் கர்ப்பமாக இருப்பதை அறிவித்த நிலையில் அவ்வப்போது கர்ப்பமாக இருக்கும் புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை வெளியிட்டு வருகிறார். சமீபத்தில் கூட அமலாபால் தனது கணவர் தேசாய் உடன் தண்ணீரில் மிதக்கும் வீடியோவை வெளியிட்டு இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் தற்போது அவர் கர்ப்பமான காலத்தில் மலசானா என்ற யோகா செய்திருக்கும் வீடியோவை வெளியிட்டுள்ளார். கர்ப்ப காலத்தில் மலசானா யோகம் செய்வதை நான் மிகுந்த மகிழ்ச்சியுடன் கருதுவதாகவும் இடுப்பு சக்தியை அதிகரிக்கும் ஒரு மந்திரமாக இந்த யோகாவை நான் கருதுகிறேன் என்றும் அமலாபால் கூறியுள்ளார்.

அதேபோல் நீண்ட கடற்கரையில் நடைபயிற்சி செய்வது, வெறுங்காலுடன் சூரிய அஸ்தமனத்தை பார்ப்பது, கர்ப்ப குமட்டலுக்கு சிறந்த சிகிச்சையாக இருக்கும் என்றும் அவர் தெரிவித்துள்ளார். எனது கால்கள் மணலையும் உப்பு நீரையும் தொடும் போது அதை ஒரு அதிசய மருத்துவ குணமாக நான் பார்க்கிறேன் என்றும் தெரிவித்துள்ளார். மேலும் இந்த யோகாவை செய்வதற்கு முன்பு மருத்துவரை அணுகி அவருடைய ஆலோசனை பெற்றுக் கொள்ள வேண்டும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

தனது கணவர் தனக்கு மிகச் சிறந்த நண்பராக இருப்பதாகவும் என்னை மிகவும் நன்றாக கவனித்துக் கொள்வதாகவும் நான் ஆசீர்வதிக்கப்பட்டவராக உணர்கிறேன் என்றும் அவர் அந்த பதிவில் தெரிவித்துள்ளார்.

More News

அஜர்பைஜானில் பிரபல மலையாள நடிகர்..அஜித்தின் 'விடாமுயற்சி'யில் இணைந்ததாக அறிவிப்பு..!

அஜித் நடித்த வரும் 'விடாமுயற்சி' திரைப்படத்தில் ஏற்கனவே ஒரு சில பிரபலங்கள் நடித்து வரும் நிலையில் தற்போது மலையாள பிரபல நடிகர் இணைந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.  

அலுவலக பெண் ஊழியருடன் ஜல்சா செய்யும் விதார்த்.. மனைவி பூர்ணாவின் வருகை.. 'டெவில்' ஸ்னீக்பீக் வீடியோ..!

விதார்த் நடித்த 'டெவில்' என்ற திரைப்படம் பிப்ரவரி 2ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாக இருக்கும் நிலையில் இந்த படத்தின் ஸ்னீக் பீக்  வீடியோ வெளியாகி இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.

'வேட்டையன்' அடுத்தகட்ட படப்பிடிப்பு எங்கே? ரஜினியுடன் இணைவது யார் யார்?

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் உருவாகி வரும் 'வேட்டையன்' படத்தின் படப்பிடிப்பு கடந்த சில மாதங்களாக நடைபெற்று வருகிறது என்பதை பார்த்து வருகிறோம். இந்த நிலையில்

சூர்யா ஜோடியாக ஸ்ரீதேவி மகளா? எந்த படத்தில் தெரியுமா?

சூர்யா ஜோடியாக ஸ்ரீதேவியின் மகள் ஜான்வி கபூர் நடிக்க இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.

இந்த மாதிரி படங்களை பார்க்கும் போது கோபமாக வருகிறது.. ராதிகா சொன்னது எந்த படத்தை?

நடிகை ராதிகா இந்த மாதிரி படங்களை பார்க்கும்போது தனக்கு கோபமாக வருகிறது என்று குறிப்பிட்டுள்ளதை அடுத்து அது எந்த படமாக இருக்கும் என்று ரசிகர்கள் தங்களுடைய யூகங்களை பதிவு செய்து வருகின்றனர்.