'அமரன்' படத்தின் ரிலீஸ் தேதி இதுவா? இயக்குனர் ராஜ்குமார் பெரியசாமியின் அடுத்த படத்தின் ஹீரோ யார்?

  • IndiaGlitz, [Sunday,March 17 2024]

சிவகார்த்திகேயன், சாய் பல்லவி நடித்த ’அமரன்’ படத்தின் படப்பிடிப்பு இறுதி கட்டத்தில் இருக்கும் நிலையில் இந்த படத்தின் ரிலீஸ் தேதி குறித்த தகவல் தற்போது கசிந்துள்ளது. அதுமட்டுமின்றி இந்த படத்தின் இயக்குனர் ராஜ்குமார் பெரியசாமி இயக்கும் அடுத்த படத்தின் ஹீரோ யார் என்ற தகவலும் தற்போது தெரியவந்துள்ளது.

மறைந்த ராணுவ வீரர் ஒருவரின் வாழ்க்கை வரலாறு திரைப்படமாக உருவாகி வரும் ’அமரன்’ படத்தின் படப்பிடிப்பு கடந்த சில மாதங்களாக விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில் இன்னும் ஒரு சில நாட்களில் இந்த படத்தின் ஒட்டுமொத்த படப்பிடிப்பு முடிந்து விடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

ஏற்கனவே இந்த படத்தின் கிராபிக்ஸ் உட்பட ஒரு சில போஸ்ட் புரடொக்சன்ஸ் பணிகள் நடைபெற்று வரும் நிலையில் இந்த படம் ஆகஸ்ட் மாதம் வெளியாகும் என்று முதலில் கூறப்பட்டது. ஆனால் தற்போது வெளிவந்துள்ள தகவல்படி இந்த படம் விநாயகர் சதுர்த்தி விடுமுறை தினத்தில் வெளியாக இருப்பதாகவும் அதற்காக பணிகள் நடைபெற்று வருவதாகவும் கூறப்படுகிறது.

இந்த நிலையில் அமரன் இயக்குனர் ராஜ்குமார் பெரியசாமி இயக்கும் அடுத்த திரைப்படத்தில் தனுஷ் நடிக்க இருப்பதாகவும் இந்த படத்தை கோபுரம் பிலிம்ஸ் நிறுவனம் தயாரிக்க இருப்பதாகவும் இந்த படம் குறித்த அறிவிப்பு மிக விரைவில் வெளியாகும் என்றும் கூறப்படுகிறது.

 

More News

50 வருட கனவு நனவாகிவிட்டது.. ரஜினியை சந்தித்த பின் ட்விட் செய்த பிரபல தொழிலதிபர்..!

பிரபல தொழிலதிபர் டாக்டர் வேலுமணி அவர்கள் இன்று சூப்பர் ஸ்டார் ரஜினியை சந்தித்த பின்னர் தன்னுடைய 50 வருட கனவு ஆகிவிட்டது என்று தனது சமூக வலை தளத்தில் பதிவு செய்துள்ளார்.

விளம்பரம் இல்லை, புரமோஷன் இல்லை.. ஆனாலும் சாதனை வசூல்.. 'மஞ்சும்மெல் பாய்ஸ்' குவித்த கோடிகள்..!

மலையாளத் திரைப்படமான 'மஞ்சும்மெல் பாய்ஸ்' என்ற திரைப்படம் தமிழில் டப் செய்யாமல் மலையாளத்திலேயே தமிழகத்தில் வெளியானது என்பதும் இந்த படம் கேரளாவில் விட தமிழகத்தில் மிக அதிக வசூல் செய்தது

அடுத்த ஜென்மம் என்று இருந்தால்.. சகோதரர் மறைவு குறித்து 'பாண்டியன் ஸ்டோர்ஸ்' நடிகையின் பதிவு..!

'பாண்டியன் ஸ்டோர்ஸ்' உட்பட பல சீரியல்கள் நடித்த நடிகை சுஜிதாவின் சகோதரரும் பாக்யராஜ் நடித்த 'மௌன கீதங்கள்' உள்பட பல திரைப்படங்களில் குழந்தை நட்சத்திரமாக நடித்து

5 வருடங்களுக்கு பின் புத்துயிர் பெறும் விஜய் டிவி நிகழ்ச்சி.. பிக்பாஸ் டைட்டில் வின்னர் பங்கேற்பு..!

பிக் பாஸ் நிகழ்ச்சி முடிந்தவுடன் 'குக் வித் கோமாளி' சீசன் 5 ஒளிபரப்பாகும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் அந்த நிகழ்ச்சியில் இருந்து நடுவர், தயாரிப்பாளர், இயக்குனர்

அனுஷ்கா ஷெட்டியின் அடுத்த படத்தில் இணைந்த 'கோட்' நடிகர்.. ஜோடியாக நடிக்கிறார்களா?

தமிழ் தெலுங்கு திரையுலகில் முன்னணி நடிகையாக இருந்த அனுஷ்கா ஷெட்டி முதல் முதலாக ஒரு மலையாள படத்தில் நடிக்க இருக்கிறார் என்றும் அந்த படத்தின் பூஜை சமீபத்தில் நடந்தது என்பதையும் பார்த்தோம்.