அமேசான் எடுத்த அதிரடி முடிவு: சினிமா ரசிகர்கள் மகிழ்ச்சி

  • IndiaGlitz, [Saturday,November 02 2019]

அமேசான் நிறுவனம் அனைத்து பொருட்களையும் வீட்டுக்கே வந்து கொடுக்கும் சேவையை செய்து வருகிறது என்பது தெரிந்ததே. உட்கார்ந்த இடத்திலிருந்தே மக்கள் அனைத்து பொருட்களையும் அமேசான் மற்றும் பிளிப்கார்ட் செயலியில் இருந்து பெற்றுக் கொள்கின்றனர். இதனால் சிறு மற்றும் குறு வணிகர்களுக்கு பெரும் பாதிப்பு ஏற்பட்டதாகவும் குறிப்பாக தீபாவளிக்கும் அதிகளவில் வியாபாரம் பாதிக்கப்பட்டதாகவும் வணிகர்கள் தரப்பில் இருந்து கூறப்படுகிறது

இந்த நிலையில் அமேசானின் அடுத்த அதிரடி நடவடிக்கையாக ஆன்லைன் சினிமா டிக்கெட்டுகள் விற்பனை செய்ய முன்வந்துள்ளது. இதற்காக அந்நிறுவனம் ஆன்லைன் சினிமா விக்கெட்டுகளை விற்பனை செய்யும் முன்னணி நிறுவனத்துடன் ஒப்பந்தம் செய்துள்ளது

இந்த ஒப்பந்தத்தின் அடிப்படையில் இனிமேல் சினிமா டிக்கட்டுகளை அமேசான் செயலிலிருந்து முன்பதிவு செய்து கொள்ளலாம். இதற்காக இரண்டு சதவீத கேஷ்பேக் சலுகையையும் அமேசான் நிறுவனம் அறிவித்துள்ளது என்பதால் முன்பதிவு செய்பவர்கள்மகிழ்ச்சி அடைந்துள்ளனர்

தமிழகம் முழுவதும் உள்ள திரையரங்குகளில் விரைவில் ஆன்லைனில் மூலம் டிக்கெட் விற்பனை செய்யும் வகையில் வழிவகை செய்யப்படும் என தமிழக அமைச்சர் கடம்பூர் ராஜு அவர்கள் கடந்த சில நாட்களுக்கு முன் அறிவித்த நிலையில் விரைவில் தமிழகத்தில் உள்ள அனைத்து திரையரங்குகளும் டிஜிட்டலாக மாறும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த நிலையில் அமேசான் இந்தத் துறையில் கால்பதித்து உள்ளதால் ரசிகர்களுக்கு சலுகைகள் குவியும் என எதிர்பார்க்கப்படுகிறது