close
Choose your channels

ஐந்து இயக்குனர்களின் ஆந்தாலஜி திரைப்படம்: டைட்டில், ரிலீஸ் தேதி அறிவிப்பு!

Wednesday, September 30, 2020 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டு இருந்ததால் திரை உலகமே ஸ்தம்பித்துப் போய் இருந்த நிலையில் முன்னணி இயக்குனர்கள் சிலர் ஆந்தாலஜி திரைப்படத்தை இயக்கும் பணியில் ஈடுபட்டு இருந்தனர் என்ற தகவல்களை ஏற்கனவே பார்த்தோம்

அந்த வகையில் தற்போது ஐந்து முன்னணி இயக்குநர்கள் இணைந்து இயக்கி உள்ள ஆந்தாலஜி திரைப்படம் ஒன்று அமேசான் பிரைமில் வெளியாக இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த திரைப்படத்தில் இயக்குனர்கள் கார்த்திக் சுப்புராஜ், கவுதம் மேனன், சுதா கொங்கரா, ராஜீவ் மேனன் மற்றும் சுகாசினி ஆகியோர் ஐந்து பகுதிகளாக இயக்கி உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது

இந்த ஆந்தாலஜி திரைப்படத்திற்கு ’புத்தம் புது காலை’ என்ற டைட்டில் வைக்கப்பட்டுள்ளது என்பதும் வரும் 16ஆம் தேதி உலகம் முழுவதும் அமேசானில் இந்த ஆந்தாலஜி திரைப்படம் ரிலீஸ் ஆக இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.