close
Choose your channels

அம்பிகா, ராதா தெரியும்.. இவர்களின் சகோதரியை பார்த்ததுண்டா? இதோ வைரல் புகைப்படம்..!

Saturday, March 18, 2023 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

தமிழ் திரை உலகின் சகோதரிகள் நடிகைகளான அம்பிகா மற்றும் ராதா ஆகிய இருவருமே கமல்ஹாசன், ரஜினிகாந்த் உள்பட பல முன்னணி நடிகர்களுடன் நடித்துள்ளார்கள் என்பது தெரிந்தது. இந்த நிலையில் இந்த இருவரின் உடன்பிறந்த சகோதரி புகைப்படம் ஒன்று தற்போது இணையதளங்களில் வைரல் ஆகி வருகிறது.

கேரளாவைச் சேர்ந்த நடிகைகளான அம்பிகா, ராதா ஆகிய இருவருமே கடந்த 80களில் தமிழ் திரையுலகில் முன்னணி நடிகையாக இருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது. இருவரும் சேர்ந்து ஒரு சில படங்களில் நடித்துள்ளார்கள் என்பதும் அவற்றில் ரஜினிகாந்த் நடித்த ’எங்கேயோ கேட்ட குரல்’ கமல்ஹாசன் நடித்த ’காதல் பரிசு’ ஆகிய படங்கள் நல்ல வரவேற்பை பெற்றன என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் அம்பிகா, ராதா ஆகிய இருவருக்கும் ஒரு சகோதரி உள்ளார். அவர் பெயர் மல்லிகா. இந்த நிலையில் நடிகை அம்பிகா தனது சகோதரி மல்லிகாவுடன் ரயில் பயணம் செய்த புகைப்படம் ஒன்றை வெளியிட்டுள்ளார். பல வருடங்களுக்கு பிறகு தற்போது தான் ரயில் பயணம் தனது சகோதரியுடன் செல்வதாகவும் இந்த ரயில் பயணத்தின் போது வாட்டர் பாட்டில், நியூஸ் பேப்பர், பழங்கள் பொரிகள் ஆகியவற்றையும் எடுத்துச் செல்கிறோம் என்றும் அம்பிகா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவு செய்துள்ளார். தனது சகோதரி மல்லிகாவுடன் நடிகை அம்பிகா இருக்கும் இந்தப் புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது.


 

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.