மீண்டும் இணையும் தனுஷ் - அமீர்? எந்த படத்தில் தெரியுமா?

  • IndiaGlitz, [Tuesday,September 07 2021]

சூர்யா நடித்த ’மௌனம் பேசியதே’ என்ற திரைப்படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமான அமீர், அதன்பின்னர் ’ராம்’ ’பருத்திவீரன்’ ’ஆதிபகவன்’ போன்ற படங்களை இயக்கினார் என்பதும் ஒரு சில படங்களில் நடித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் மீண்டும் தனுஷ் நடிக்கும் ஒரு படத்தில் இயக்குனர் அமீர் நடிக்க உள்ளதாக தகவல்கள் வெளிவந்துள்ளன. தனுஷ் நடிப்பில் கார்த்திக் நரேன் இயக்கத்தில் உருவாகி வரும் திரைப்படம் ’மாறன்’. இந்த படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில் இந்த படத்தில் ஒரு முக்கிய கேரக்டரில் அமீர் நடிப்பதாக தகவல்கள் வெளிவந்துள்ளன. இதுகுறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு படக்குழுவினர்களிடம் இருந்து விரைவில் வெளிவரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த நிலையில் தனுஷ் நடிப்பில், வெற்றிமாறன் இயக்கத்தில் உருவான ’வடசென்னை’ திரைப்படத்தில் இயக்குனர் அமீர் ஒரு முக்கிய கேரக்டரில் நடித்து இருந்தார் என்பதும், இந்த கேரக்டர் அவருக்கு மிகப்பெரிய வரவேற்பை பெற்று தந்தது என்பது குறிப்பிடத்தக்கது.