close
Choose your channels

அரவிந்தசாமியின் 'புலனாய்வில்' இணைந்த பிரபல இயக்குனர்!

Wednesday, June 19, 2019 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

நடிகர் அரவிந்தசாமி நடிப்பில் இயக்குனர் சந்தோஷ் ஜெயகுமார் இயக்கவுள்ள திரைப்படத்தின் டைட்டில் 'புலனாய்வு' என்ற அறிவிப்பு நேற்று வெளியானது என்பதை ஏற்கனவே பார்த்தோம். இந்த நிலையில் தற்போது இந்த படத்தில் பிரபல இயக்குனர் ஒருவர் இணைந்துள்ளார். அவர்தான் இயக்குனர் அமீர்.

'புலனாய்வு' திரைப்படத்தில் அரவிந்தசாமி சிபிசிஐடி அதிகாரியாக நடிக்கவிருப்பதாகவும், அவருக்கு உதவும் ஒரு முக்கிய கேரக்டரில் அமீர் நடிக்கவிருப்பதாகவும் செய்திகள் வெளிவந்துள்ளது. மேலும் இதே படத்தில் நடிகர் ஜான்விஜய் முக்கிய வேடம் ஒன்றில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார்.

மேலும் இந்த படத்தில் நாயகியே கிடையாது என்றும் செய்திகள் வெளிவந்துள்ளது. முழுக்க முழுக்க த்ரில், சஸ்பென்ஸ், ஆக்சன் காட்சிகள் கொண்ட இந்த படத்தில் ரொமான்ஸ் காட்சிகளுக்கு வேலையே இல்லை என்பதால் நாயகி இல்லை என்று தெரிகிறது. கார்த்தி நடித்து முடித்துள்ள 'கைதி' திரைப்படத்திலும் இதேபோல் நாயகி இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.