'பருத்திவீரன்' திரைப்பட நடிகர் காலமானார்: திரையுலகினர் இரங்கல்..!
Send us your feedback to audioarticles@vaarta.com
கார்த்தி, பிரியாமணி நடிப்பில் அமீர் இயக்கத்தில் உருவான ’பருத்திவீரன்’ என்ற திரைப்படத்தில் முக்கிய கேரக்டரில் நடித்த நடிகர் ஒருவர் காலமானதை அடுத்து திரையுலகினர் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்
அமீர் இயக்கத்தில் உருவான ’பருத்திவீரன்’ என்ற திரைப்படம் கடந்த 2007 ஆம் ஆண்டு வெளியானது. நடிகராக கார்த்தி அறிமுகமான படம் என்பது மட்டுமின்றி இந்த படத்தில் சிறப்பாக நடித்ததற்காக பிரியாமணிக்கு தேசிய விருது கிடைத்தது என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில் இந்த படத்தில் பொணந்தின்னி என்ற கேரக்டரில் நடித்த செவ்வாழை ராசு இன்று காலமானார் என்ற தகவல் திரையுலகினர்கள் அதிர்ச்சியடைய செய்துள்ளது. தேனி மாவட்டத்தை சேர்ந்த செவ்வாழை ராசு பல திரைப்படங்களில் குணச்சித்திர நடிகராகவும் காமெடி நடிகராகவும் நடித்துள்ளார். குறிப்பாக மைனா, கிழக்கு சீமையிலே, கந்தசாமி ஆகிய படங்களில் முக்கிய கேரக்டரில் நடித்துள்ளார்.
இந்நிலையில் கடந்த சில மாதங்களாக உடல் நலக்குறைவு காரணமாக மதுரை தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த செவ்வாழை ராசு சிகிச்சையின் பலன் இன்றி இன்று காலமானார். அவருக்கு வயது 70. இதனை அடுத்து அவரது மறைவுக்கு திரையுலகினர் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
- logoutLogout