'உயிர் தமிழுக்கு' படத்திற்கு கிடைத்த வரவேற்பு.. இயக்குனர் அமீர் வெளியிட்ட அறிக்கை..!


Send us your feedback to audioarticles@vaarta.com


அமீர் நடிப்பில் ஆதம்பாவா இயக்கத்தில் சமீபத்தில் வெளியான ’உயிர் தமிழுக்கு’ என்ற திரைப்படம் கலவையான விமர்சனங்களை பெற்றது என்றும் ஓரளவு சுமாரான வசூல் செய்தது என்று தகவல்கள் வெளியாகி உள்ளன.
தமிழக அரசியல் களத்தை மையமாகக் கொண்டு உருவாக்கப்பட்ட கதையம்சம் கொண்ட இந்த படம் மாபெரும் வெற்றி பெற்றுள்ளதாக கூறியுள்ள இயக்குனர் அமீர், இந்த படத்திற்கு ஆதரவு அளித்த அனைவருக்கும் நன்றி என்று தெரிவித்துள்ளார். சற்றுமுன் அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:
மரியாதைக்குரிய பத்திரிகை, தொலைக்காட்சி, மற்றும் சமூக வலைதள ஊடக நண்பர்களுக்கு வணக்கம்.
திரு. ஆதம்பாவா அவர்களின் தயாரிப்பு மற்றும் இயக்கத்தில் நான் முதன்மை பாத்திரமேற்று நடித்து வெளியான "உயிர் தமிழுக்கு" திரைப்படத்திற்கு நீங்கள் தந்த ஆதரவையும் என்னுடைய நடிப்பிற்கும் நீங்கள் தந்த பாராட்டுதலையும், தங்களின் மேன்மையான விமர்சனங்களையும் கண்டு மகிழ்ச்சியுற்றேன்.
மேலும் "உயிர் தமிழுக்கு" திரைப்படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பில் கலந்து கொண்ட திரு. பொன்வண்ணன், திரு. கரு.பழனியப்பன், திரு. SR. பிரபாகர், திரு. சிநேகன், உள்ளிட்டோருக்கும், திரைப்படம் வெளியான போது வாழ்த்து தெரிவித்த தம்பி சசிகுமார் நண்பர் சேரன் உள்ளிட்டோருக்கும் திரைப்படத்தை பார்த்துவிட்டு உளமார பாராட்டிய அண்ணன் சீமான் அவர்களுக்கும் நண்பர் வெற்றிமாறன் அவர்களுக்கும் மற்றும் நண்பர்கள், உறவுகள், பத்திரிகையாளர்கள் அனைவருக்கும் என்னுடைய நெஞ்சார்ந்த நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.
From the Desk of Director/Actor #Ameer@directorameer pic.twitter.com/Z6tClgJBnP
— Nikil Murukan (@onlynikil) May 15, 2024
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
-
Aadhira Palani
Contact at support@indiaglitz.com
Comments