'பருத்திவீரன்' விவகாரம் இருக்கட்டும்.. திடீரென சூர்யாவுக்கு நன்றி சொன்ன அமீர்..!

  • IndiaGlitz, [Wednesday,December 13 2023]

கடந்த சில நாட்களாக ’பருத்திவீரன்’ விவகாரம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது என்பதும் இயக்குனர் அமீருக்கு ஆதரவாக திரையுலக பிரபலங்கள் பலர் குரல் கொடுத்தனர் என்பதையும் பார்த்தோம்.

இந்த நிலையில் ’பருத்திவீரன்’ விவகாரம் ஒரு பக்கம் இருக்கும் நிலையில் திடீரென நடிகர் சூர்யாவுக்கு இயக்குனர் அமீர் நன்றி தெரிவித்து அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.

சூர்யா, த்ரிஷா நடிப்பில் அமீர் இயக்கத்தில் உருவான ’மௌனம் பேசியதே’ என்ற திரைப்படம் சரியாக 21 ஆண்டுகளுக்கு முன் இன்று தான் வெளியானது. கடந்த 2002 ஆம் ஆண்டு டிசம்பர் 13ஆம் தேதி வெளியான இந்த படம் 21 ஆண்டுகளை நிறைவு செய்ததை அடுத்து இயக்குனர் அமீர் நெகிழ்ச்சியுடன் வெளியிட்ட அறிக்கை இணையத்தில் வைரல் ஆகி வருகிறது. அந்த அறிக்கையில் அவர் கூறியிருப்பதாவது:

கடந்த ஒரு மாதத்திற்கு முன் என்னை வீழ்த்துவதற்காக அவதூறுகளையும், அவமானங்களையும் பொதுவெளியில் எனக்கு சிலர் அன்பளிப்பாக கொடுத்த போது, நான் சோர்ந்துவிடாமலும் துவண்டுவிழாமலும் பார்த்துக் கொள்ளும் விதமாக எனக்கு தன்னம்பிக்கையையும், அன்பையும், ஆதரவையும் எதிர்பாராத அளவிற்கு எனக்களித்த அனைவருக்கும் நன்றிகள்.

ஒரு இயக்குனராக எனக்கு அடையாளத்தைப் பெற்று தந்த என்னுடைய முதல் திரைப்படம் மௌனம் பேசியதே வெளியாகி இன்றோடு 21 ஆண்டுகள் நிறைவடைந்திருக்கிறது. இந்த நெகிழ்வான தருணத்தை உங்களோடு பகிர்ந்து கொள்வதில் நான் மகிழ்ச்சியடைகிறேன். சென்னையை நோக்கி - சினிமாவை நோக்கி படையெடுத்து வந்த எல்லோரது கனவும் நனவாவது இல்லை.

அப்படி கனவுகளை சுமந்து கொண்டிருந்த கூட்டத்தில் ஒருவனாக இருந்த என்னை கரம் பிடித்து உயர்த்தி என்னுடைய திரைக்கனவை நனவாக்கிய, ‘மௌனம் பேசியதே’ திரைப்படத்தின் தயாரிப்பாளர்கள் கணேஷ் ரகு மற்றும் வெங்கி நாராயணன் உள்ளிட்ட அபராஜித் ஃபிலிம்ஸ் நிறுவனத்தாருக்கும், என்னோடு பயணித்து திரைப்படத்தின் வெற்றிக்கு கரம் கொடுத்த சூர்யா, திரிஷா, லைலா உள்ளிட்ட நடிகர்- நடிகைகளுக்கும், ஒளிப்பதிவாளர் ராம்ஜி மற்றும் யுவன் ஷங்கர் ராஜா உள்ளிட்ட அனைத்து தொழில்நுட்ப கலைஞர்கள் மற்றும் திரைத்துறை தொழிலாளர்களுக்கும் என் நன்றிகள்.!

என்னுடைய திரைப்பயணம் தொடங்கிய இந்த 21 ஆண்டுகளில், நான் இயக்கிய படங்கள் குறைவாக இருந்தாலும் இன்னும் என்னை மனதில் நிறுத்தி தொடர்ந்து சமூக வலைதளங்களில், ஊடகங்களில் ஆதரவு தந்து கொண்டிருக்கிற திரை ரசிகர்களுக்கும், ஊடக பத்திரிகை நண்பர்களுக்கும், தமிழக மக்களுக்கும் குறிப்பாக மௌனம் பேசியதே ரசிகர்களுக்கும் எனது மனமார்ந்த நன்றிகள்” என இயக்குனர் அமீர் தெரிவித்துள்ளார்.

More News

ஒரிஜினல் LCU இதுதான்.. 'கைதி 2' ரிலீசுக்கு முன் லோகேஷின் மாஸ் திட்டம்..!

இயக்குனர் லோகேஷ் கனகராஜ் திரைப்படம் என்றாலே LCU காட்சிகள் இருக்கும் என்று ரசிகர்கள் எதிர்பார்க்கத் தொடங்கிவிட்டனர். 'லியோ' படத்தில் கூட LCU இருக்கும் என்று எதிர்பார்த்த நிலையில்

'அயலான்' கேரக்டருக்கு குரல் கொடுத்தது இந்த பிரபல நடிகரா? கசிந்த ரகசியம்..!

சிவகார்த்திகேயன் நடித்த 'அயலான்' திரைப்படம் வரும் பொங்கல் தினத்தில் வெளியாக இருக்கும் நிலையில் இந்த படத்திற்கு மிகப்பெரிய எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.

லோகேஷ் கனகராஜ் ஃபேஸ்புக்கில் ஆபாச வீடியோக்கள்? என்ன ஆச்சு? ரசிகர்கள் அதிர்ச்சி

பிரபல இயக்குனர் லோகேஷ் கனகராஜின் ஃபேஸ்புக் ஹேக் செய்யப்பட்டதாகவும் இதனை அடுத்து அந்த தளத்தில் ஆபாச வீடியோக்கள் உட்பட பல விஷயங்கள் பகிரப்பட்டு வருவதாகவும் கூறப்படுகிறது.  

முதல் சீசனை அடுத்து 7வது சீசனில் தான்.. சுவர் ஏறி குதிக்க முயன்ற போட்டியாளர்..!

பிக் பாஸ் நிகழ்ச்சியின் முதல் சீசனில் போட்டியாளராக இருந்த பரணி சுவரேறி குதிக்க முயன்ற நிலையில் அதன் பிறகு ஏழாவது சீசனில் ஒரு போட்டியாளர் சுவரேறி  குதிக்க முயன்ற  வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.  

யாஷின் 'டாக்ஸிக்' படத்தில் 3 ஹீரோயின்கள்.. அதில் ஒருவர் தமிழ் நடிகை.. கதை இதுவா?

பிரபல கன்னட நடிகர் யாஷ், 'கேஜிஎப்' மற்றும் 'கேஜிஎப் 2' ஆகிய இரண்டு படங்கள் மூலம்  உலக புகழ் பெற்றார் என்பதும் இதனை அடுத்து அவர் 'டாக்ஸிக்' என்ற படத்தில் நடிக்க இருக்கிறார் எ