அமெரிக்கா, WHO வுடன் இருந்த தொடர்பை முறித்துக் கொண்டது!!! அதிரடி அறிவிப்பு வெளியட்ட அதிபர் ட்ரம்ப்!!!

  • IndiaGlitz, [Saturday,May 30 2020]

 

இன்று செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசிய அமெரிக்க அதிபர் ட்ரம்ப் இதுவரை உலகச் சுகாதார அமைப்புடன் இருந்து வந்த தொடர்பை அமெரிக்கா துண்டித்துக் கொள்ளும் என்ற அறிவிப்பை வெளியிட்டு இருக்கிறார். “கொரோனா பரவல் விவகாரத்தில் சீனா பெருத்த தவறை இழைத்து விட்டது. இந்த விவாரகத்தில் சீனாவை குற்றவாளியாக்கும் பொறுப்பில் இருந்து WHO விலகி இருக்கிறது” என நேரடியாகக் குற்றம் சாட்டினார். மேலும், கொரோனா பரவல் விஷயத்தில் WHO விற்கு சீனா மிகுந்த அழுத்தம் கொடுத்ததாகவும் சீனாவின் தவறான கொள்கையால்தான் உலகம் முழுவதும் கொரோனா கடும் அழிவுகளை ஏற்படுத்தி விட்டது எனவும் அதிபர் ட்ரம்ப் கருத்துகளை வெளியிட்டு இருக்கிறார்.

முன்னதாகவே WHO விற்கு வழங்கப்பட்டு வரும் நன்கொடை நிறுத்தப்படும் எனக் கூறியிருந்த ட்ரம்ப் தற்போது அந்த நன்கொடையை உலகப் பொதுச் சுகாதாரத்தை மையமாகக் கொண்டு செயல்பட்டு வரும் மற்ற அமைப்புகளுக்கு கொடுக்கப் போவதாகவும் கூறியிருக்கிறார். இதுவரை WHO விற்கு உலகளவில் அதிக நிதியுதவி வழங்கும் ஒரு நாடாக அமெரிக்கா இருந்து வந்தது என்பதும் குறிப்பிடத்தக்கது. கடந்த 2019 ஆம் ஆண்டு கிட்டத்தட்ட 400 அமெரிக்க டாலர்களை நன்கொடையாக வழங்கியிருக்கிறது அமெரிக்கா. இந்நிலையில் உலகச் சுகாதார அமைப்பில் இருந்து துண்டித்துக் கொள்வதாக அதிபர் ட்ரம்ப் வெளிப்படையாக கூறியிருக்கிறார். இந்தச் சம்பவத்தால் கடும் பரபரப்பு கிளம்பியிருக்கிறது.

கொரோனா விஷயத்தில் சீனாவின் நடத்தைக் குறித்து விரிவான விசாரணை தேவை என்று உலகச் சுகாதார அமைப்பின் பொதுக்குழுக் கூட்டத்தில் 120 நாடுகள் சேர்ந்து கோரிக்கை வைத்தது. அந்தக் கோரிக்கையை ஏற்ற அதன் தலைவர் டெட்ரோஸ் அதானோம் விரிவான விசாரணை நடத்தப்பட்டு அறிக்கை வெளியிடப்படும் என்ற நம்பிக்கையையும் அந்த மாநாட்டில் அளித்து இருந்தார். பொதுக்குழுக் கூட்டம் முடிந்த உடனே அமெரிக்க அதிபர் 30 நாட்களுக்குள் உலகச் சுகாதார அமைப்பு விரைந்து செயல்பட வேண்டும் என்ற எச்சரிக்கையையும் வெளிப்படுத்தி இருந்தார். இந்நிலையில் அந்தக் கெடு முடிவதற்குள்ளாகவே உலகச் சுகாதார அமைப்பில் இருந்து வெளிவருவதாகவும் தெரிவித்து இருக்கிறார்.

அமெரிக்காவில் கொரோனாவால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 1 லட்சத்து 2 ஆயிரமாக அதிகரித்து இருக்கிறது. அதிபர் ட்ரம்ப் கொரோனா நோய்ப் பரவலை தடுப்பதில் தோல்வியடைந்து விட்டார் என்று பொதுமக்கள் வெளிப்படையாக குற்றம் சாட்டும் நிலையும் அந்நாட்டில் அதிகரித்து இருக்கிறது. இதனால் கொரோனா பரவல் விஷயத்தில் தன்னுடைய தவறுகளை மறைப்பதற்காகவே சீனா மீது அடுக்கடுக்கான குற்றச்சாட்டுகளில் ஈடுபட்டு வருகிறார் என்பது போலவும் சில விமர்சனங்கள் தொடர்ந்து வைக்கப் பட்டு வருகின்றன.

More News

சின்னத்திரை படப்பிடிப்பு: தமிழக முதல்வரின் அதிரடி உத்தரவு

கொரோனா வைரஸ் அச்சம் காரணமாக தமிழகத்தில் கடந்த இரண்டு மாதங்களாக சின்னத்திரை மற்றும் பெரியதிரை படப்பிடிப்புகள் முடங்கியுள்ளது என்பது தெரிந்ததே

ஒரே நாளில் சுமார் 8000 பேர்: இந்தியாவில் 1.73 லட்சமாக உயர்ந்து கொரோனா பாதிப்பு

இந்தியாவில் கடந்த சில நாட்களுக்கு முன் வரை தினமும் ஆயிரம் முதல் இரண்டாயிரம் பேர்கள் வரை கொரோனாவினால் பாதிக்கப்பட்டிருந்த நிலையில் தற்போது

மருத்துவர்கள் கொரோனா வைரஸால் பாதிக்கப்படும் போது வேகமாக இறக்கின்றனர்!!! இதற்கு என்ன காரணம்???

பொதுவாக கொரோனா வைரஸால் பாதிக்கப்படும் நபரைவிட விட மருத்துவர்கள், செவிலியர்கள்,

கொரோனா வைரஸால் பாதிக்கப்படும் 10 வயதுக்கும் கீழான குழந்தைகள்!!! பாகிஸ்தானில் புது நெருக்கடி!!!

பாகிஸ்தானின் சிந்து மாகாணத்தில் 10 வயதுக்கும் குறைவான 930 குழந்தைகள், கொரோனா நோயால் பாதிக்கப்பட்டு இருப்பதாக செய்திகள் வெளியாகி இருக்கிறது

பிளாஷ் பேக்: 1962 இல் இந்தியா, சீனா எல்லைப்போர்!!! நடந்தது என்ன???

சில நாட்களாக இந்திய எல்லைப் பகுதிகளில் கடும் பதட்டம் நிலவி வருவதை நாம் ஊடகங்களில் பார்த்துக் கொண்டு வருகிறோம்