close
Choose your channels

அமெரிக்காவின் முதல் பெண்மணி மெலானியா: இதுவரை அறியப்படாத உண்மைகள்

Tuesday, February 25, 2020 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

அமெரிக்காவின் முதல் பெண்மணி மெலானியா: இதுவரை அறியப்படாத உண்மைகள்

 

 

அமெரிக்க அதிபரின் மனைவியாக வலம் வரும் மெலானியாவின் வாழ்க்கை மிகவும் சுவாரசியம் நிறைந்தது மட்டுமின்றி வலிமை வாய்ந்ததாகவும் இருக்கிறது. எண் 600 - பென்சில்வேனியா சாலையில் இருந்து ஒரு நாள் உலகம் முழுவதும் அறியப்படுகின்ற பெரிய மாடலாக வளர்ந்து வந்திருக்கிறார் மெலானியா.

ஏப்ரல் 6, 1970 இல் சில்வேனியாவில் பிறந்த இவர் மெலானியா நாம்ஸ் என்றே அழைக்கப் படுகிறார். தனது இளமை காலம் முழுவதும் ஓய்வில்லாதவராக இருந்திருக்கிறார். கட்டுப்பாடான வாழ்க்கையை வாழ்ந்திருக்கிறார். ஓயாத உழைப்பு ஒரு சிறிய நகரத்தில் இருந்து உலகம் முழுவதும் அறிந்த பிரபல மாடலாக வளர உதவி செய்திருக்கிறது. புகைகளைக் கக்கும் சிறிய நகரத்தின் மத்தியில் இருந்து கொண்டு இவர் தனது 16 ஆவது வயதில் ஒரு மிகச் சிறந்த மாடலாக வளர்ந்து நின்றார்.

1996 இல் சில்வேனியா பல்கலைக்கழகத்தில் தனது ஆர்கிடெக் படிப்பை தொடங்கினார். இவரைப் பற்றி புகைப்படக் கலைஞர்கள் சிரிக்கவே மாட்டார் என்று அப்போதே குறிப்பிட்டு இருந்தனர். 1987 இல் தனது முதல் புகைப்பட நிகழ்வினை நடத்தியிருக்கிறார்.

பாரிஸில் நடைபெற்ற மாடலிங்கில் போட்டியில் 1992 இல் 2 வது இடத்தை பிடித்தார். பின்பு 1996 இல் அமெரிக்க மார்டலின் உலகில் காலடி எடுத்து வைக்கிறார். போட்டி நிறைந்த உலகில் தனது பயணத்தை மிகவும் வெற்றிகரமாகவே பயணிக்கிறார். பிளாஸ்டிக் சர்ஜரி செய்து தன்னை அழகுப் படுத்திக் கொணடார் என்ற விமர்சனத்தை எல்லாம் தாண்டி உலகின் மிகப் பெரிய மாடலாக வளர்ந்து நிற்கிறார்.

பாரிஸ், கிட்கேட் கிளப்பில் ட்ரம்ப் உடன் நடந்த சந்திப்பு அவரது வாழ்க்கையை மிகவும் சுவாரசியம் உடையதாக மாற்றியிருந்தது. ட்ரம்ப் உடன் 2005 இல் திருமணம் நடக்கிறது. 2006 இல் மகன் பெயர்ன் பிறக்கிறார். தன்னை விட 24 வயது மூத்தவரை திருமணம் செய்து கொண்ட மெலானியாவை பார்த்து குடும்பத்தில் உள்ள அனைவரும் ஆச்சரியப்படுகின்றனர்.

அதிபர் ட்ரம்ப்புக்கு மெலானியா மூன்றாவது மனைவி என்பதும் நாம் அனைவரும் அறிந்ததே. முதல் மனைவி இவானா, தற்போது இவருக்கு 63 வயது ஆகிறது என்பதும் குறிப்பிடத்தக்கது. செக்கோஸ் லாவியா நாட்டைச் சேர்ந்தவர் இவர் ஒரு மாடல் அழகி மற்றும் வர்த்தகத்திலும் கொடி கட்டிப் பறந்தவராக இருந்தார். 1979 ட்ரம்ப் மணந்து கொண்ட இவர் 1992 பிரிந்தார் என்பதும் குறிப்பிடத் தக்கது.

பின்னர், ட்ரம்ப், மரியா மாப்பில்ஸ் என்ற நடிகையை காதலித்து திருமணம் செய்து கொண்டார். அவருடன் ட்ரம்ப் 6 ஆண்டுகள் வாழ்ந்தார் என்பதும் குறிப்பிடத் தக்கது.

பின்பு மாடல் அழகியான மெலானியாவை காதலித்து திருமணம் செய்து கொண்டிருக்கிறார். ட்ரம்பின் மனைவியாகவும் அமெரிக்காவின் முதல் பெண்மணியாகவும் இருந்து வருகிறார்.

அமெரிக்காவின் முதல் பெண்மணியாக இருந்து வரும் மெலானியா மீது எப்போதும் 2 குற்றச்சாட்டுகள் தொடர்ந்து வைக்கப் படுகின்றன. ஆரம்பத்தில் யாரைப் பார்த்தாலும் சிரிக்கவே மாட்டார் என்றும் அதற்கு சில்வேனியா காலாச்சாரம் தான் காரணம் எனவும் சொல்லப் பட்டது. பொதுக்கூட்டத்தில் தனது உணர்ச்சிகளைக் கட்டுப் படுத்த தெரியாதவர் என்ற குற்றச் சாட்டும் இவர்மீது வைக்கப் பட்டது குறிப்பிடத் தக்கது.

ஆங்கிலம், பிரெஞ்ச், ஜெர்மன், இத்தாலியன், செர்பியன், சில்வேனியா போன்ற பல மொழிகளைக் கற்றுத் தேர்ந்திருக்கிறார். 2000 இல் அமெரிக்காவின் பிரபல மாடலாக இருந்த இவர் சில பத்திரிகைகளுக்கு நிர்வாணமாகவும் போஸ் கொடுத்திருகிறார். தனது இளமையான தோற்றத்திற்கு தினமும் 7 பழங்களை சாப்பிடுவதாகவும் ஒரு பேட்டியில் குறிப்பிட்டு இருந்தார் மெலானியா.

மெலானியாவின் வருகையால் வெள்ளை மாளிகை புத்துணர்ச்சி பெற்றிருக்கிறது என்று அதன் ஊழியர்கள் மகிழ்ச்சி தெரிவித்துள்ளனர் என்பதும் குறிப்பிடத் தக்கது. அமெரிக்காவின் குடிமக்கள் ட்ரம்ப்பை விட மெலானியா குறித்து அதிக மதிப்பு கொண்டிருப்பதாக ஒரு கருத்துக் கணிப்பில் தெரிய வந்தது. சிறந்த உடை நேர்த்திக்காகவும் மெலானியா உலக மக்களிடம் மதிப்பு பெற்றவராக இருக்கிறார்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.