பிரிட்டனில் இருந்து சென்னை வந்தவருக்கு கொரோனா பாசிடிவ்??? புதிய வகை கொரோனாவா???

  • IndiaGlitz, [Tuesday,December 22 2020]

 

பிரிட்டனில் கடந்த வாரம் முதல் புதிய வகை கொரோனா மாதிரி பரவி வருவதாகக் கூறப்பட்டது. இந்த புதிய வகை கொரோனா வைரஸ் மற்ற வகைகளைவிட 70% அதிவேகமாக பரவுவதாகவும் அந்நாட்டு சுகாதாரத்துறை அச்சம் தெரிவித்தது. இதனால் இங்கிலாந்தின் பல மாகாணங்களுக்கு தற்போது ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டு உள்ளது. மேலும் புதிய வகை கொரோனா பாதிப்பை தவிர்ப்பதற்காக இந்தியா உட்பட பல நாடுகள் பிரிட்டன் நாட்டின் விமான சேவையை ரத்து செய்து இருக்கின்றன.

இந்நிலையில் கடந்த சில தினங்களுக்கு முன்பு பிரிட்டனில் இருந்து சென்னைக்கு விமானம் மூலம் வந்தவருக்கு கொரோனா உறுதிச் செய்யப்பட்டு உள்ளதாகச் சுகாதாரத்துறை தகவல் வெளியிட்டு உள்ளது. இந்தத் தகவலை அடுத்து பிரிட்டனில் இருந்து வந்தவருக்கு புதிய வகை கொரோனா வைரஸ் (VUI-202012/01) பாதிப்பாக இருக்குமோ எனப் பலரும் சந்தேகத்தை எழுப்பி வருகின்றனர். இந்நிலையில் பாதிக்கப்பட்டவரின் சளி மாதிரி பூனே அறிவியல் ஆராய்ச்சி கழகத்தில் அனுப்பி வைக்கப்பட்டு உள்ளதாகத் தகவல் கூறப்பட்டு இருக்கிறது.

அந்த ஆய்வு முடிவுகள் வெளியான பிறகுதான் புதிய வகை கொரோனா மாதிரியா என்பதை உறுதி செய்ய முடியும் என்று சுகாதாரத்துறை செய்தி வெளியிட்டு இருக்கிறது. இதனால் பொதுமக்கள் யாரும் பீதி அடைய வேண்டாம் என்று தமிழக சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் கேட்டுக் கொண்டுள்ளார்.

More News

வகுப்பறையில் தாலி கட்டிய பள்ளி மாணவன்… வைரல் வீடியோவால் வெடித்த சர்ச்சை!!!

கடந்த டிசம்பர் 2 ஆம் தேதி வெளியான ஒரு வீடியோவில் ஒரு பள்ளி மாணவன் தன்னுடன் பயிலும் ஒரு மாணவிக்கு வகுப்பறையில் வைத்தே தாலிக் கட்டுகிறார்.

ஒரு சின்ன உதவியால் நடந்த பெரும் டிவிஸ்ட்… நெகிழ்ச்சி சம்பவம்!!!

பிரேசில் நாட்டில் பிச்சைக்காரனுக்கு முடித்திருத்தம் செய்ததால் அதுவே இறுதியில் பெரும் டிவிஸ்டாக மாறி இருக்கிறது.

வில்லன் நடிகருக்கு கோவில் கட்டிய கிராமத்து மக்கள்!

தமிழகத்தில் குஷ்பு உள்பட ஒரு சில நடிகைகளுக்கு ரசிகர்கள் கோவில் கட்டிய நிலையில் தெலுங்கானா மாநிலத்தில் உள்ள கிராமத்து மக்கள் வில்லன் நடிகர் ஒருவருக்கு கோவில் கட்டி வழிபாடு செய்து வருவது

அப்படியா சொன்னேன்: ஆச்சரியமாக கேட்ட இயக்குனர் அஜய் ஞானமுத்து!

சினிமா ரசிகர்களைப் பொறுத்தவரை தங்களுடைய விருப்பத்துக்குரிய நடிகர் நடித்து வரும் திரைப்படங்களின் அப்டேட்டுக்களை கேட்டு சமூக வலைதளங்களில் பதிவு செய்வது ஒரு வாடிக்கையாகிவிட்டது.

பெராரி காரா, மெட்ரோ ரயிலா, எது சிறந்தது? தமிழ் நடிகரின் பதிவு

சென்னை மக்களுக்கு கிடைத்த வரப்பிரசாதங்களில் ஒன்று மெட்ரோ ரயில் என்பதும் குறைந்த கட்டணத்தில் மிக விரைவாக எந்தவித போக்குவரத்து இடையூறுமின்றி செல்ல வேண்டிய இடத்திற்கு சரியான