நீச்சல் குளத்தில் தேனிலவு கொண்டாடும் அமீர்-பாவனி ரெட்டி.. வைரல் வீடியோ..!


Send us your feedback to audioarticles@vaarta.com


பிக் பாஸ் போட்டியாளர்களான அமீர் மற்றும் பாவனி ரெட்டி திருமணம் சமீபத்தில் நடந்த நிலையில், தற்போது இருவரும் நீச்சல் குளத்தில் தேனிலவு கொண்டாடும் வீடியோவை தங்களது சமூக வலைதளத்தில் பதிவு செய்துள்ள நிலையில், அந்த வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.
பிக் பாஸ் நிகழ்ச்சியின் போது காதலித்த அமீர் மற்றும் பாவனி ரெட்டி, அந்த நிகழ்ச்சி முடிந்த பின்னர் வெளியேயும் தங்களது காதலை தொடர்ந்தனர். இருவரும் தங்களது தொழிலில் செட்டிலானவுடன் திருமணம் செய்ய வேண்டும் என்ற உறுதியில் இருந்த நிலையில், சமீபத்தில் இவர்களது திருமணம் வெகு சிறப்பாக நடைபெற்றது.
இந்நிலையில், தற்போது அமீர் - பாவனி ஹனிமூனுக்கு சென்றுள்ளனர். அதைப் பற்றிய வீடியோவை இன்ஸ்டாகிராமில் வெளியிட்டுள்ளனர். நீச்சல் குளத்தில் நெருக்கமாக இருப்பது, நீச்சல் குளத்திலேயே சாப்பாடு வரவழைத்து சாப்பிடுவது மற்றும் அசத்தலான போஸ் கொடுத்த காட்சிகள் இந்த வீடியோவில் உள்ளன.
இந்த வீடியோவுக்கு ஏராளமான லைக்ஸ் மற்றும் கமெண்ட்கள் குவிந்து வருகிறது. இந்த வீடியோவுக்கு கேப்ஷனாக, பாவனிரெட்டி, "ஒரு குட்டி விடுமுறை! என்னுடைய நெருக்கமானவருடன் வந்திருக்கிறேன். இப்படி ஒரு இனிமையான பிரேக் கண்டிப்பாக இருவருக்கும் தேவைப்படுகிறது," என்று பதிவு செய்துள்ளார். இந்த பதிவு தற்போது இணையத்தில் பரவலாக பகிரப்பட்டு வருகிறது.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
-
Aadhira Palani
Contact at support@indiaglitz.com
Comments