மீண்டும் தென்னிந்திய திரைப்படத்தில் அமிதாப்பச்சன்? பிரபல நடிகருக்கு தாத்தா என தகவல்..!

  • IndiaGlitz, [Sunday,April 07 2024]

நடிகர் அமிதாப்பச்சன் ஏற்கனவே சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்து வரும் ’வேட்டையன்’ படத்தில் முக்கிய கேரக்டரில் நடித்து வரும் நிலையில் அவர் மீண்டும் ஒரு தென்னிந்திய திரைப்படத்தில் நடிக்க இருப்பதாகவும் பிரபல ஹீரோவுக்கு தாத்தா கேரக்டரில் நடிக்க ஒப்புக்கொண்டு உள்ளதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன.

நடிகர் அமிதாப்பச்சன் கடந்த பல ஆண்டுகளாக ஹிந்தி திரையுலகில் மட்டுமே நடித்து வந்த நிலையில் கடந்த 2019 ஆம் ஆண்டு சிரஞ்சீவி நடித்த ’சைரா நரசிம்மரெட்டி’ என்ற தெலுங்கு படத்தில் சிறப்பு தோற்றத்தில் நடித்திருந்தார். அதன் பின்னர் ’ராதே ஷ்யாம்’ என்ற திரைப்படத்தில் வாய்ஸ் ஓவர் மட்டும் கொடுத்திருந்த அமிதாப்பச்சன் பிரபாஸ், கமல்ஹாசன் நடித்து வரும் ’கல்கி 2898 ஏடி’ என்ற படத்திலும் ஒரு முக்கிய கேரக்டரில் நடித்து வருகிறார்.

இந்த நிலையில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்து வரும் ’வேட்டையன்’ என்ற திரைப்படத்தின் மூலம் தமிழில் அறிமுகமாகும் அமிதாப்பச்சன், தற்போது ராம்சரண் தேஜா நடிக்க இருக்கும் அடுத்த படத்தில் ஒரு முக்கிய கேரக்டரில் அதாவது ராம்சரண் தேஜாவின் தாத்தா கரக்டரில் நடிக்க இருப்பதாக கூறப்படுகிறது .

ஏற்கனவே இந்த படத்தில் ஸ்ரீதேவியின் மகள் ஜான்வி கபூர் நாயகியாக நடிக்க இருக்கும் நிலையில் தற்போது அமிதாப்பச்சன் இணைந்துள்ளதை அடுத்த இந்த படத்திற்கு எதிர்பார்ப்பு அதிகரித்து உள்ளது. புஜ்ஜிபாபு இயக்கத்தில், ஏ ஆர் ரஹ்மான் இசையில் உருவாகும் இந்த படத்தில் விஜய் சேதுபதி, சிவராஜ் குமார் ஆகியவர்களும் சிறப்பு தோற்றத்தில் நடிக்க உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

 

More News

ஹேப்பி பர்த்டே கங்கம்மா.. 'தங்கலான்' நடிகைக்கு வாழ்த்து சொன்ன பா ரஞ்சித்.. புதிய போஸ்டர்..!

பா. ரஞ்சித் இயக்கத்தில் உருவான 'தங்கலான்' படத்தில் நடித்த நடிகை இன்று தனது பிறந்த நாளை கொண்டாடி வரும் நிலையில் அவருடைய கேரக்டர் போஸ்டரை வெளியிட்டு இயக்குனர் ரஞ்சித்

ஒரு பக்கம் பறக்கும் படை சோதனை.. இன்னொரு பக்கம் ரசிகர்கள் செல்பி.. அஜித் பட நடிகையால் பரபரப்பு..!

அஜித் படத்தில் நடித்த நடிகை காரில் சென்று கொண்டிருந்தபோது அவரது காரை நிறுத்தி பறக்கும் படை அதிகாரிகள் ஒரு பக்கம் சோதனை செய்து கொண்டிருந்த நிலையில், இன்னொரு பக்கம் திடீரென ரசிகர்கள் குவிந்து அந்த

'கோட்' படப்பிடிப்பின் ரஷ்யா லொகேஷன் இதுதான்.. அர்ச்சனா கல்பாத்தி பகிர்ந்த புகைப்படம்..!

தளபதி விஜய் நடித்து வரும் 'கோட்' படத்தின் அடுத்த கட்ட படப்பிடிப்பு ரஷ்யாவில் நடைபெற இருப்பதாக கூறப்பட்ட நிலையில் சமீபத்தில் விஜய் உட்பட குழுவினர் ரஷ்யா சென்றனர் என்பதையும் பார்த்தோம்.

'இந்தியன் 2' படத்திற்கு முன்பே ரிலீஸாகும் கமல் படங்கள்.. அடுத்தடுத்து வெளியாகும் 3 படங்கள்..!

உலகநாயகன் கமல்ஹாசன் நடிப்பில் ஷங்கர் இயக்கத்தில் உருவாகியுள்ள 'இந்தியன் 2' படம் ஜூன் மாதம் வெளியாகும் என்று நேற்று அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ள நிலையில்

அஜித்தின் 'குட் பேட் அக்லி' படத்தில் இணைகிறாரா 'ஜெயிலர்' நடிகர்?

அஜித்தின் 'விடாமுயற்சி' திரைப்படத்தின் அடுத்த கட்ட படப்பிடிப்பு விரைவில் தொடங்க இருக்கும் நிலையில் அவர் நடிக்க இருக்கும் அடுத்த திரைப்படமான 'குட் பேட் அக்லி' படத்தின் படப்பிடிப்பு ஜூன் மாதம்