3 மில்லியன் டன் இலக்கு.. 5 மில்லியன் டன்னாக மாற்றுவோம். பொருளாதாரத்தை எடை போட்ட அமித்ஷா..!

  • IndiaGlitz, [Saturday,February 15 2020]

2025ம் ஆண்டுக்குள் இந்தியாவின் பொருளாதாரம் 5 ட்ரில்லியன் டாலராக உயரும் என மோடி அரசின் அமைச்சரவை சகாக்கள் அவ்வப்போது தெரிவித்து வருகின்றனர். முந்தைய பட்ஜெட் கூட்டத்தின் போதும் மத்திய நிதியமைச்சராக உள்ள நிர்மலா சீதாராமன் இதையே குறிப்பிட்டு நிதிநிலை அறிக்கையை வாசித்தார்.

ஆனால், நாட்டின் பொருளாதாரமோ அதள பாதாளத்திற்கு சென்று கொண்டிருக்கிறது. கடந்த ஆறு ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு, கடுமையான சரிவை சந்தித்து வருகிறது. அதற்கு உதாரணமாக நாட்டில் சில்லறை பணவீக்கம் 7.59 சதவிகிதமாக உயர்ந்துள்ளது.

இந்நிலையில், டைம்ஸ் நவ் நாளிதழின் மாநாட்டில் பங்கேற்று இந்திய பொருளாதாரம் குறித்து உள்துறை அமைச்சர் அமித்ஷா பேசியுள்ளது இணையத்தில் பேசு பொருளாகியுள்ளது. அதில், இந்தியாவின் பொருளாதாரம் 2025க்குள் 5 ட்ரில்லியன் டாலராக உயரும் எனும் கூற்றுக்கு பதில், “ஏற்கெனவே 3 மில்லியன் ’டன்’ என வகுத்திருந்த திட்டத்தின் அடிப்படையில் 5 மில்லியன் ’டன்’ இலக்கை நோக்கை நகர்ந்துக் கொண்டிருக்கிறோம்” என அமித்ஷா பேசியுள்ளார்.   

இதனையடுத்து அமித்ஷாவின் இந்த பேச்சுக்கு சமூக வலைதளத்தில் நெட்டிசன்கள் வருத்தெடுத்து வருகிறார்கள். முன்னதாக, காங்கிரஸின் ரோஹன் குப்தா “இனி ஜி.டி.பி. மில்லியன் டன் அடிப்படையில் கணக்கிடப்படும்; இது பா.ஜ.கவின் புதுமையான கண்டுபிடிப்பு” எனக் குறிப்பிட்டு அமித்ஷாவை விமர்சித்திருந்தார்.

இன்னும் சிலர், புத்திசாலித்தனமான பேச்சு. அமித்ஷா வாட்ஸ் அப் பள்ளியில் படித்திருந்ததால் அது மில்லியன் டன் ஆகியுள்ளது என கிண்டலடித்து வருகின்றனர். மறுபக்கம், இந்த அளவீடுகள் கூட தெரியாத ஒருவர் உள்துறை அமைச்சர் பதவியில் இருப்பது வேதனை அளிப்பதாக இருக்கிறதும் என்றும் வருத்தத்தோடு பதிவிட்டு வருகின்றனர்.

 

More News

மனதை உருக்கும் ஒரு புகைப்படம் – உயிர்க் கொடுத்தவரையே காவு வாங்கிய வரலாற்று பின்னணி

வரலாற்றில் ஒரு புகைப்படம், உலக அரசியலையே திரும்பி பார்க்க வைத்தி

ரசிகர்களிடம் மன்னிப்பு கேட்ட சந்தானம் பட இயக்குனர்!

நடிகர் சந்தானம் நடித்த 'சர்வர் சுந்தரம்' திரைப்படத்தின் ரிலீஸ் தேதி பலமுறை அறிவிக்கப்பட்டும் இன்னும் அந்த படம் ரிலீஸாகவில்லை. சந்தானம் நடித்த 'டகால்டி' திரைப்படம்

த்ரிஷாவின் 'பரமபதம் விளையாட்டு'க்கு பாராட்டு தெரிவித்த பிரபல நடிகை

நடிகை த்ரிஷா நடித்த 'பரமபதம் விளையாட்டு' என்ற திரைப்படம் வரும் 28ஆம் தேதி வெளியாகும் என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டு அதற்கான பணிகள் தற்போது விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது

ஒரு புலி இன்னொரு புலியை புகைப்படம் எடுத்திருக்கிறது..! தோனி பற்றிய வைரல் கமெண்ட்.

இதனை, 'புலியை படம் எடுத்த புலி'என்று தோனியின் ரசிகர்கள் புகழ்ந்து வருகின்றனர்.ரசிகர் ஒருவர் தோனியை புலி என்று குறிப்பிட்டது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

1700 மருத்துவ பணியாளர்களுக்கு கொரோணா தொற்று... திணறும் சீனா.

சீனாவில் 1,700 மருத்துவப் பணியாளர்கள் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், அவர்களில் 6 பேர் உயிரிழந்துவிட்டதாகவும் அந்நாட்டு அரசு தெரிவித்துள்ளது.