close
Choose your channels

கொரோனாவால் பாதிக்கப்பட்ட மற்றொரு திரையுலக பிரபலம்: மருத்துவமனையில் அனுமதி!

Monday, May 17, 2021 • தமிழ் Comments

கடந்த சில நாட்களாக திரையுலகைச் சேர்ந்த பலரும் கொரோனாவால் பாதிக்கப்பட்டு ஒரு சிலர் உயிரிழந்து வருகின்றனர் என்பதையும் பலர் அதிலிருந்து குணமாகி வருகின்றனர் என்பதையும் பார்த்து வருகிறோம். இன்று அதிகாலை பிரபல பாடலாசிரியர் மற்றும் இயக்குனர் அருண்ராஜா காமராஜ் அவர்களின் மனைவி கொரோனாவால் பாதிக்கப்பட்டு காலமானார் என்ற செய்தி திரையுலகினரை பேரதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது

இந்த நிலையில் சற்று முன் இன்னொரு பிரபலமும் கொரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சையில் இருப்பதாக தகவல் வெளிவந்துள்ளது. பிரபல தயாரிப்பு நிறுவனமான அம்மா கிரியேஷன்ஸ் வெங்கட் அவர்கள் கொரோனாவால் பாதிக்கப்பட்டு சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் உள்ளார் என்று தகவல் வெளிவந்துள்ளது. இதனை அடுத்து அம்மா கிரியேஷன்ஸ் சிவா அவர்கள் தனது டுவிட்டரில் கூறியிருப்பதாவது:

எனது 36 வருட நண்பன் அம்மா கிரியேஷன்ஸ் வெங்கட் கொரோனவால் பாதிக்கப்பட்டு சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் திவிர சிகிச்சையில் உள்ளார். அவர் மீண்டு வர அனைவரும் பிராத்திக்குமாறு கேட்டுக்கொள்கிறேன்’ என்று பதிவு செய்துள்ளார்.

Get Breaking News Alerts From IndiaGlitz