மாலத்தீவு சென்றுள்ள மற்றொரு நடிகை… வைரலாகும் கிளாமர் புகைப்படம்!

  • IndiaGlitz, [Saturday,February 19 2022]

பாலிவுட் நடிகையான அம்ரியா தாஸ்தார் நடிகர் தனுஷ்ஷுடன் இணைந்து கடந்த 2015 இல் வெளியான “அநேகன்“ திரைப்படத்தில் நடித்திருந்தார். பல்வேறு கிளை கதைகளைக் கொண்ட இந்தத் திரைப்படத்தில் வெவ்வேறு விதமான கெட்டப்புகளில் வந்து ரசிகர்களை ஈர்த்திருந்தார். அதிலும் ரங்கூனில் நடைபெறும் காட்சிகளில் இவருடைய நடிப்பு பெரும் வரவேற்பை பெற்றன.

இந்தத் திரைப்படத்திற்கு இந்தி திரைப்படங்களில் கவனம் செலுத்திவந்த அவர் சமீபத்தில் நடிகரும் இயக்குநருமான பிரபுதேவாவுடன் இணைந்து “பகீரா“ திரைப்படத்தில் நடித்திருந்தார். தற்போது பெரிய அளவிற்கு பட வாய்ப்புகள் இல்லாமல் இருந்துவரும் நடிகை அம்ரியா தாஸ்தார் தற்போது மாலத்தீவு சென்றுள்ளார்.

மாலத்தீவு ரிசார்டில் ஒன்றில் தங்கி தனது இனிமையான பொழுதை கழித்துவரும் நடிகை அம்ரியா தாஸ்தார் பிகினி உடையணிந்த புகைப்படம் எடுத்துக் கொண்டுள்ளார். அந்தப் புகைப்படம் தற்போது சோஷியல் மீடியாவில் கவனம் பெற்றிருக்கிறது. மேலும் கடற்கரை மணலில் குட்டி நடைபோடும் புகைப்படங்களையும் அவர் வெளியிட்டுள்ளார்.

கொரோனா நேரத்தில் சினிமா பிரபலங்கள் பலரும் மாலத்தீவுக்கு சென்று வந்தனர். அந்த வகையில் தற்போது “பீஸ்ட்“ நாயகி பூஜா ஹெக்டே மாலத்தீவில் தனது இனிமையான பொழுதை கழித்து வருகிறார். அதேபோல நடிகை அம்ரியா தாஸ்தரும் தற்போது மாலத்தீவில் தனது நேரத்தை செலவிட்டு வரும் நிலையில் அவர் வெளியிட்டுள்ள புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி இருக்கின்றன.

More News

உக்ரைனில் இருக்கும் 20,000 இந்தியர்களின் கதி என்ன?

போர் மேகங்கள் சூழ்ந்திருக்கும் உக்ரைன் நாட்டில் மாணவர்கள், தொழிலாளர்கள் என இந்தியாவைச் சேர்ந்த 20,000

நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல்: இரண்டு இடங்களில் நடந்த 'சர்கார்' பட காட்சிகள்

தமிழகத்தில் இன்று காலை முதல் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலுக்கான வாக்குப்பதிவு நடைபெற்று வரும் நிலையில் பொதுமக்கள், திரையுலக பிரபலங்கள், அரசியல்வாதிகள் தங்களுடைய ஜனநாயக கடமையை

மாறி மாறி பழிவாங்கிய வனிதா-பாலா: வேதாள விளக்கு படும்பாடு!

விஜய் டிவியில் பிக்பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சி கடந்த சில நாட்களாக ஒளிபரப்பாகி வரும் நிலையில் தற்போது இந்த நிகழ்ச்சி சூடு பிடித்துள்ளது. பிக்பாஸ் வீட்டில் இருக்கும் 12 போட்டியாளர்களும்

'அரபிக்குத்து' பாடலுக்கு செம ஆட்டம் ஆடிய இயக்குனர் நெல்சன் மகன்!

 தளபதி விஜய் நடித்த 'பீஸ்ட்' திரைப்படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்து தற்போது இறுதிக்கட்ட பணிகள் நடைபெற்று வருகிறது.  இந்நிலையில் 'பீஸ்ட்' படத்தில் பெற்றிருந்த 'அரபிக்குத்து' என்ற பாடல் சமீபத்தில்

கோவிலில் கிடைத்த தரிசனம்: இளையராஜாவுடனான சந்திப்பு குறித்து பிரபல பாடகி

இசைஞானி இளையராஜாவை சந்தித்தது குறித்து பிரபல பாடகி கூறியபோது கோவிலில் சென்று தரிசனம் கிடைத்த உணர்வுக்கு கிடைத்ததாக குறிப்பிட்டுள்ளார்.