'2.0' படக்குழுவினர்களின் கிறிஸ்துமஸ் கொண்டாட்டம்

  • IndiaGlitz, [Saturday,December 26 2015]

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் பிரமாண்ட இயக்குனர் ஷங்கர் இயக்கத்தில் இந்தியாவின் மிகப்பெரிய பட்ஜெட்டில் உருவாக இருக்கும் 2.0' என்ற படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் ஆரம்பமானது என்பது அனைவரும் அறிந்ததே. இந்நிலையில் முதல்கட்ட படப்பிடிப்பு இன்னும் சில நாட்களில் முடிவடையும் நிலையில் நேற்று '2.0' படக்குழுவினர் சார்பில் கிறிஸ்துமஸ் விழா சிறப்பாக கேக் வெட்டி கொண்டாடப்பட்டது.

இந்த கிறிஸ்துமஸ் கொண்டாட்டத்தில் ரஜினிகாந்த், எமிஜாக்சன், ஷங்கர் உள்பட படக்குழுவினர் பலர் கலந்து கொண்டனர். ரஜினி மற்றும் எமிஜாக்சன் இணைந்து கேக் வெட்டி அனைவருக்கும் பரிமாறினர்.

மேலும் இதே கிறிஸ்துமஸ் தினத்தில் எமிஜாக்சன் நடித்த இன்னொரு படமான 'கெத்து' படத்தின் பாடல்கள் ரிலீஸாகியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. ஒரே நாளில் சூப்பர் ஸ்டாருடன் கிறிஸ்துமஸ் கொண்டாட்டம் மற்றும் உதயநிதியுடன் நடித்த படத்தின் பாடல் வெளியீடு என இரண்டு முக்கிய நிகழ்வுகள் எமிஜாக்சனுக்கு நடைபெற்றுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.