close
Choose your channels

'இந்தியன் 2' படம் குறித்த அடுத்த முக்கிய அறிவிப்பு

Friday, July 26, 2019 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

உலக நாயகன் கமல்ஹாசன் நடிப்பில் பிரமாண்ட இயக்குனர் ஷங்கர் இயக்கத்தில் லைக்கா நிறுவனத்தின் தயாரிப்பில் உருவாகவுள்ள திரைப்படம் இந்தியன்-2.

இந்தப் படத்தின் முதல் கட்ட படப்பிடிப்பு ஏற்கனவே முடிந்துவிட்ட நிலையில் அடுத்தகட்ட படப்பிடிப்பு வரும் ஆகஸ்ட் மாதம் தொடங்க உள்ளது.

மேலும் இந்த படத்தில் சமீபத்தில் ஐஸ்வர்யா ராஜேஷ், ப்ரியா பவானி சங்கர் ஆகிய இரண்டு நடிகைகள் இணைந்து உள்ளதால் இந்த படத்தின் எதிர்பார்ப்பு உச்சத்தை அடைந்து வருகிறது.

இந்த நிலையில் இந்த படத்தின் முக்கிய அறிவிப்பு ஒன்று சற்றுமுன் வெளியாகியுள்ளது. அதன்படி இந்த படத்தில் முக்கிய கேரக்டர்களில் நடிக்க அனுபவமுள்ள நடிகர் நடிகைகள் தேவை என்றும் விருப்பமுள்ளவர்கள் தொடர்பு கொள்ளலாம் என்றும் சமூக வலைதளங்களில் விளம்பரம் செய்யப்பட்டுள்ளது.

இதனை அடுத்து இன்னும் ஒரு சில நாட்களில் இந்த படத்தில் நடிக்கும் அனைத்து நடிகர் நடிகைகள் பட்டியல் முழுமையடைந்து விடும் எனத் தெரிகிறது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.   

Related Videos