'நீயா 2' படத்தின் முக்கிய அறிவிப்பு

  • IndiaGlitz, [Tuesday,January 29 2019]

கோலிவுட் திரையுலகில் கடந்த ஆண்டு அதிக படங்களில் நடித்த நடிகைகளில் ஒருவர் வரலட்சுமி. அவரது நடிப்பில் கடந்த ஆண்டு வெளியான 'Mr.சந்திரமெளலி, சண்டக்கோழி 2, 'சர்கார்', 'மாரி 2' ஆகிய படங்கள் வெளியாகி ரசிகர்களின் வரவேற்பை பெற்றன.

இந்த நிலையில் அவர் தற்போது நடித்து வரும் படங்களில் ஒன்றான 'நீயா 2' திரைப்படத்தின் முக்கிய அறிவிப்பு ஒன்று இன்று மாலை 6 மணிக்கு வெளியாகவுள்ளதாக படக்குழுவினர்களால் அறிவிக்கப்பட்டுள்ளது.

ஜெய், வரலட்சுமி, ராய்லட்சுமி, கேதரின் தெரசா உள்ளிட்ட பலர் நடித்து வரும் 'நீயா 2' படத்தை எல்.சுரேஷ் இயக்கி வருகிறார். ஷபீர் இசையில், ராஜவேல் மோகன் ஒளிப்பதிவில், கோபி கிருஷ்ணா படத்தொகுப்பில் உருவாகிவரும் இந்த படம் வரும் கோடை விடுமுறையில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

மேலும் நடிகை வரலட்சுமி தற்போது, 'வெல்வெட் நகரம்', 'கன்னிராசி', 'கன்னித்தீவு', 'காட்டேரி', 'அம்மாயி போன்ற படங்களில் நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
 

More News

முடிவுக்கு வந்த ரகுல் ப்ரித்திசிங்கின் அடுத்த தமிழ்ப்படம்

கார்த்தியுடன் ரகுல் ப்ரித்திசிங் நடித்த 'தேவ்' திரைப்படம் வரும் பிப்ரவரி 14ஆம் தேதி காதலர் தினத்தில் வெளிவரவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இளையராஜாவுக்காக ஹங்கேரியில் இருந்து பறந்து வந்த இசைக்கலைஞர்கள்!

தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்கத்தின் சார்பில் வரும் பிப்ரவரி 2 மற்றும் 3 ஆகிய தேதிகளில் சென்னை நந்தனத்தில் உள்ள ஒய்.எம்.சி.ஏ மைதானத்தில் 'இளையராஜா 75' என்ற பிரமாண்டமான இசை நிகழ்ச்சி நடைபெறவுள்ளது.

சிவகார்த்திகேயன், நயன்தாரா படத்திற்கு தரலோக்கல் டைட்டில்?

சிவகார்த்திகேயன், நயன்தாரா நடிப்பில் ராஜேஷ் எம் இயக்கிய 'எஸ்கே 13' படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் முடிவடைந்த நிலையில் இந்த படத்தின் போஸ்ட் புரடொக்சன்ஸ் பணிகள் தற்போது தொடங்கியுள்ளது.

சமந்தாவுக்காக மாற்றம் செய்யப்பட்டதா? 96 தெலுங்கு ரீமேக் குறித்து இயக்குனர்

விஜய்சேதுபதி, த்ரிஷா நடிப்பில் கடந்த ஆண்டு வெளியான சூப்பர் ஹிட் திரைப்படமான '96' தற்போது தெலுங்கில் உருவாகவுள்ளது. ராம், ஜானு கேரக்டர்களில் சர்வானந்த் மற்றும் சமந்தா நடிக்கவுள்ளனர்

8 மாதங்களில் ரூ.1000 கோடி பிசினஸ்: சூப்பர் ஸ்டாரின் வசூல் வேட்டை

கடந்த 40 ஆண்டுகளுக்கும் மேலாக தமிழ் திரையுலகின் சூப்பர் ஸ்டாராகவும், வசூல் சக்கரவர்த்தியாகவும் இருந்து வரும் ரஜினிகாந்த், இந்த வயதிலும் மெகா ஸ்டார்களுக்கு ஈடுகொடுக்கும் வகையில் வெற்றிப்படங்களில்