விஷாலின் 'மருது' படப்பிடிப்பு தொடங்கும் தேதி அறிவிப்பு

  • IndiaGlitz, [Sunday,November 22 2015]

பாண்டியராஜ் இயக்கத்தில் விஷால் நடித்து வந்த 'கதகளி' திரைப்படம் வரும் பொங்கல் தினத்தில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. விஷால், காத்ரினா தெரசா, நாசர், சூரி மற்றும் பலர் நடித்த இப்படத்தை விஷால் பிலிம் பேக்டரி நிறுவனம் தயாரித்து வருகிறது,.

இந்நிலையில் விஷாலின் அடுத்த படமான 'மருது' படத்தின் படப்பிடிப்பு நாளை இராஜபாளையம் நகரில் தொடங்கவிருப்பதாக கூறப்படுகிறது. 'கொம்பன்' இயக்குனர் முத்தையா இயக்கும் இந்த படத்தின் கதை கிராமத்து பின்னணியை கொண்டது என்பது குறிப்பிடத்தக்கது. இராஜபாளையத்தில் இந்த படத்தின் படபிடிப்புக்கு தேவையான அனைத்து ஏற்பாடுகளும் தயார் நிலையில் இருப்பதாகவும் கூறப்படுகிறது.

விஷால், ஸ்ரீதிவ்யா, 'தாரை தப்பட்டை' வில்லன் ஆர்.கே.சுரேஷ் உள்பட பலர் நடிக்கவுள்ள இந்த படத்திற்கு டி.இமான் இசையமைக்கவுள்ளார். மேலும் நடிகர் சங்க தேர்தலில் விஷாலுடன் நேருக்கு நேர் மோதிய ராதாரவியும் இந்த படத்தில் ஒரு முக்கிய கேரக்டரில் நடிக்கவுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

More News

நயன்தாராவின் அடுத்த ஹீரோ விக்ரம்?

விஜய் நடித்த 'புலி' படத்தின் தயாரிப்பாளர்களில் ஒருவரான ஷிபு தமீன், விக்ரம் நடிக்கவுள்ள அடுத்த படத்தை தயாரிக்கவுள்ளதாக ஏற்கனவே பார்த்தோம்...

இசைஞானிக்கு கெளரவம் செய்ய 'தாரை தப்பட்டை' குழுவினர் திட்டம்

தேசியவிருது பெற்ற இயக்குனர் பாலாவின் இயக்கத்தில் உருவாகியுள்ள 'தாரை தப்பட்டை' திரைப்படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்து...

கமல்ஹாசனின் அடுத்த பட டைட்டில்?

உலக நாயகன் கமல்ஹாசன் நடிப்பில் கடந்த தீபாவளி தினத்தில் வெளியான 'தூங்காவனம்' திரைப்படம் ஹிட் ஆன நிலையில் நேற்று....

சூர்யா, சிவகார்த்திகேயனுடன் இணைந்த வெற்றிமாறன்

சிவகார்த்திகேயன், கீர்த்தி சுரேஷ் நடித்த 'ரஜினிமுருகன்' திரைப்படம் மூன்று மாதங்களுக்கு முன்பே ரிலீஸுக்கு தயாராகிவிட்டபோதிலும்...

சமுத்திரக்கனியின் அடுத்த படத்தில் 'காக்கா முட்டை' சிறுவன்?

தற்போது கோலிவுட் திரையுலகில் இரண்டாம் பாக சீசன் களைகட்டியுள்ளது என்பதை ஏற்கனவே பார்த்தோம்...