close
Choose your channels

தொலைநோக்கு கொண்ட கல்வியாளர்  A. N. ராதாகிருஷ்ணன் மறைவு.. இறுதிச்சடங்கு குறித்த தகவல்

Monday, December 5, 2022 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

மீனாட்சி உயர்கல்வி மற்றும் ஆராய்ச்சி கல்விக்கூடம் (MAHER - deemed to - be university) யின் தலைவரும் மீனாட்சி அம்மாள் டிரஸ்ட் & முத்துக்குமரன் கல்வி டிரஸ்ட் - ன் நிர்வாக அறங்காவலரும் ஆகிய நாடு போற்றும் கல்வியாளர் திரு. A. N. ராதாகிருஷ்ணன் அவர்கள்,03-12-2022 அன்று காலை 7 மணிக்கு சென்னையில் காலமானார்.

எளிய பின்னணியில் இருந்து கல்வித்துறையில் முத்திரை பதித்த இவர் உத்தரமேரூர் அருகில் உள்ள அத்தியூர் கிராமத்தில் விவசாய குடும்பத்தில் பிறந்தவர்.

தன்னுடைய எண்ணங்களால் தன்னைத் தானே செதுக்கிக் கொண்ட இவர் கல்வி என்பதன் வலிமையை நன்கு உணர்ந்து அறிந்தவர். ஆசிரியராக தம்முடைய உத்யோக வாழ்வைத் தொடங்கிய இவர், தமிழ்நாடு அரசு சார்ந்த தொழில்நுட்ப கல்வித்துறையின் கீழ் இயங்கும் SICE என்கிற வர்த்தக கல்வி நிறுவனத்தில் முப்பது ஆண்டுகளுக்கு மேல் மூத்த விரிவுரையாளர் ஆகப் பணியாற்றினார்.

அவர், தமது தொலைநோக்கு எண்ணங்களை நிறைவேற்றும் வகையில் 1984 ஆம் ஆண்டு, சென்னை ஆலப்பாக்கம் பகுதியில் செவன் ஹில்ஸ் பாலிடெக்னிக் கல்லூரியைத் தொடங்கினார். ஆராய்ச்சியில் வலிமை மிக்க அடித்தளத்துடன் கூடியதாகவும் சமூகத்திற்கு தங்கள் கைவசம் மிகுந்த திறன் கொண்டவர்களை அளிக்க ஏதுவாக இருக்கும் மதிப்பு மிக்கதாக கல்வி இருக்க வேண்டும் என்பது அவரது ஆழ்மனதில் என்றும் இருந்து வந்தது என்பதற்கு அத்தாட்சியாக மீனாட்சி உயர்கல்வி மற்றும் ஆராய்ச்சி கல்விக்கூடம் (MAHER) திகழ்கிறது எனலாம்.

அவர் தொலைநோக்கு கொண்ட கல்வியாளர் ஆகவும் கொடை உள்ளம் உடையவர் ஆகவும் மிகச்சிறந்த நிர்வாகியாகவும் மனித நேயர் ஆகவும் விளங்கி பலருக்கு முன் உதாரணமாக வாழ்ந்து காட்டினார். அவர் விட்டுச் சென்ற சீரிய பணிகள் அவரது அடிச்சுவட்டில் என்றென்றும் தொடரும்.

அவர் MAHER ன் நிர்வாக அறங்காவலர் ஆகவும் இதனுடைய வேந்தர் ஆகவும் சீரிய முறையில் தமது பணிகளை ஆற்றினார். இந்த டிரஸ்ட் தொடங்கப்பட்ட நாளிலிருந்து டிரஸ்ட் மேற்கொண்ட ஊரகப் பகுதிகளில் பள்ளிகள் அமைத்தல் என்பதில் இருந்து அதிநவீன தொழில்நுட்ப கல்லூரிகள் அமைத்தல் வரை அவர் தமது அளப்பரிய பங்களிப்பை நல்கினார் என்பது குறிப்பிடத்தக்கது. கல்வி என்பது அனைவருக்கும் கைக்கு எட்டுவதாக இருக்க வேண்டும் அவருடைய உள்ளக்கிடக்கையை இப்படிப்பட்ட கல்விக்கூடங்கள் வாயிலாக நிறைவேற்றிக் காட்டினார்.

கல்வியில் சிறந்த தமிழ்நாடு என்ற பாரதியின் வரிகளை செயலுக்கு மொழிபெயர்த்த ஆளுமை திரு. A. N. ராதாகிருஷ்ணன் அவர்கள்

அன்னாரது இறுதிச் சடங்குகள் சென்னையில் 04-12-2022 ஞாயிற்றுக்கிழமை அன்று முற்பகல் 11.00 மணிக்கு நடைபெற்றது.

குடும்ப உறுப்பினர்கள், உறவினர்கள், நண்பர்கள், நிர்வாகிகள், ஊழியர்கள் மற்றும் மாணவ மாணவிகள் அன்னாரது மறைவுக்கு ஆழ்ந்த இரங்கலை செலுத்தினர்

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.