கொடுத்த வாக்குறுதியைக் காப்பாற்றிய ஆனந்த் மஹேந்திரா… மகிழ்ச்சியில் ஏழை குடும்பம்!

  • IndiaGlitz, [Saturday,January 29 2022]

வீட்டில் கிடைத்த பழைய உலோகங்கள், இரும்பு மற்றும் துணிப்பொருட்களை வைத்து கார் தயாரித்த மகாராஷ்டிராவை சேர்ந்த நபருக்கு ஆனந்த் மஹேந்திரா புது பொலிரோ காரை பரிசாகக் கொடுத்து அசத்தியிருக்கிறார். இதனால் அந்தக் குடும்பம் மகிழச்சியில் தத்தளித்த சம்பவம் நடைபெற்றிருக்கிறது.

மகாராஷ்டிராவைச் சேர்ந்த தத்தாத்ராயே லோசர் என்பவர் தனது குழந்தைகளின் ஆசையை நிறைவேற்றுவதற்காக தனது வீட்டில் கிடைத்த பழைய உலோகங்கள், கையில் கிடைத்தப் பொருட்களை எல்லாம் வைத்து கார் ஒன்றை உருவாக்கி அசத்தினார். கடந்த டிசம்பர் 22 ஆம் தேதி வெளியான இந்தக் கார் பற்றிய தகவல் ஒட்டுமொத்த இந்தியாவிலும் பரபரப்பாக பேசப்பட்டது. இதையடுத்து பழைய பொருட்களை வைத்து கார் உருவாக்கிய ஏழை குடும்பத்திற்கு புதிய பொலிரோ காரை பரிசாக வழங்குகிறேன் என்று ஆனந்த் மஹேந்திரா வாக்குறுதி அளித்திருந்தார்.

மேலும் அவர் உருவாக்கிய கார் சாலையில் ஓட்டுவதற்கான விதிமுறைகளை கொண்டிருக்கவில்லை. அதனால் மஹேந்திரா நிறுவனத்தின் காட்சிக்காக அந்தக் காரை கொடுத்துவிடும்படி கோரிக்கை வைத்திருந்தார். இதையடுத்து ரூ.60 ஆயிரம் செலவில் உருவாக்கப்பட்ட தனது காரை தத்தாத்ராயே லோசர் கடந்த 24 ஆம் தேதி மஹேந்திரா நிறுவனத்திற்கு கொடுத்துவிட்டு புதிய பொலிரோ பெற்றுக்கொண்டுள்ளார். இந்தச் சம்பவம் பலரது மத்தியில் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.

தொடர்ந்து விளையாட்டு வீரர்கள், வித்தியாசமான மோட்டர் வாகனங்களை உற்பத்தி செய்பவர்களுக்கு ஆனந்த் மஹேந்திரா தனது நிறுவனக் காரை பரிசாக அளித்து வருகிறார். இந்தச் சம்பவம் புதிய முயற்சிக்கு தோள் கொடுக்கும் விதமாக அமைந்திருக்கிறது என சமூகநல ஆர்வலர்கள் பாராட்டு தெரிவித்து வருகின்றனர்.

More News

'கருப்பன்' திரைப்பட இயக்குனரின் அடுத்த பட ரிலீஸ் தேதி அறிவிப்பு!

ரேணிகுண்டா, கருப்பன் ஆகிய திரைப்படங்களை இயக்கிய இயக்குனர் பன்னீர்செல்வம் இயக்கிய அடுத்த திரைப்படத்தின் ரிலீஸ் தேதி அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

அசுர வளர்ச்சியில் “மாநாடு“ பட நடிகை… 2 மாதங்களில் 4 மெகா படங்கள்!

பிரபல இயக்குநர் பிரியதர்ஷன் மற்றும் நடிகை லிசி தம்பதிகளின்

பிக்பாஸ் போட்டியாளர்களின் சம்பளம் தெரியும், பிக்பாஸ்க்கு எவ்வளவு சம்பளம் தெரியுமா?

பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட போட்டியாளர்களின் சம்பளம் குறித்த தகவல்கள் அவ்வப்போது சமூக வலைதளங்களில் வைரல் ஆனது என்பதை பார்த்தோம். அதுமட்டுமின்றி பிக்பாஸ் நிகழ்ச்சியை தொகுத்து

நூறு முறை விழுந்தாலும் எனக்கு மகிழ்ச்சியே: சமந்தாவின் வீடியோ வைரல்

நூறு முறை விழுந்தாலும் எனக்கு மகிழ்ச்சியே என வாழ்க்கை தத்துவத்துடன் தனது சுவிட்சர்லாந்து பயணத்தை இணைத்து நடிகை சமந்தா பதிவு செய்துள்ள இன்ஸ்டாகிராம் வீடியோ தற்போது வைரல் ஆகி வருகிறது.

ஒயின் மது அல்ல… மளிகை கடையில் விற்கும் அரசு!

ஒயின் மதுவகைகளுள் ஒன்றாகக் கருதப்பட்டு விற்பனை செய்யப்படும்