விஜய் ஆண்டனியின் அடுத்த பட டைட்டில்: நாயகி, இயக்குனர் குறித்த தகவல் 

  • IndiaGlitz, [Wednesday,September 02 2020]

கோலிவுட் திரையுலகின் பிரபல இசையமைப்பாளரான விஜய்ஆண்டனி, ’நான்’ என்ற திரைப்படத்தின் மூலம் ஹீரோவாகி, அதன் பின்னர் தொடர்ச்சியாக பல திரைப்படங்களில் நடித்து வருகிறார். அவர் நடித்த ’பிச்சைக்காரன்’ என்ற திரைப்படம் சூப்பர் ஹிட்டானது என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் தற்போது விஜய் ஆண்டனி ஏற்கனவே ’அக்னி சிறகுகள்’, தமிழரசன், காக்கி மற்றும் ,பிச்சைக்காரன் 2’ ஆகிய படங்களில் நடித்து வருகிறார் என்பது தெரிந்ததே. இந்த நிலையில் தற்போது அவர் நடிக்க இருக்கும் புதிய திரைப்படம் குறித்த தகவல் வெளிவந்துள்ளது. இந்த படத்தை இயக்குனர் ஆனந்த கிருஷ்ணன் இயக்கவுள்ளார். இவர் ஏற்கனவே விதார்த் நடித்த ‘ஆள்’ என்ற திரைப்படத்தை இயக்கியவர் என்பது குறிப்பிடத்தக்கது.

ஆனந்தகிருஷ்ணன் - விஜய் ஆண்டனி இணையும் படத்தின் நாயகியாக ஆத்மிகா நடிக்கவுள்ளார். இவர் ஹிப்ஹாப் தமிழா நடித்த ’மீசைய முறுக்கு’ படத்தில் நடித்தவர் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த படத்தின் படப்பிடிப்பு நேற்று முதல் தொடங்கி இருப்பதாகவும் இந்த படத்தில் நடிக்கும் நடிகர் நடிகைகள் மற்றும் தொழில்நுட்ப கலைஞர்கள் குறித்த அறிவிப்பு விரைவில் அதிகாரபூர்வமாக வெளியிடப்படும் என்றும் கூறப்படுகிறது.

மேலும் இந்த திரைப்படத்துக்கு ’அன்பு இல்லையேல் ஒரு அணுவும் அசையாது’ என்ற டைட்டில் வைக்கப்பட்டுள்ளதாகவும் இது குறித்த அறிவிப்பு விரைவில் வெளிவரும் என்று தெரிகிறது.