close
Choose your channels

'சர்கார்' படத்துக்கு டிக்கெட் கிடைக்காதவர்கள் இங்க வாங்க: ஆனந்த்ராஜ் அழைப்பு

Saturday, November 3, 2018 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

தளபதி விஜய் நடித்த 'சர்கார்' திரைப்படம் இதுவரை இல்லாத வகையில் மிக அதிகமான திரையரங்குகளில் வரும் தீபாவளி அன்று வெளியாகவுள்ளது. இந்த படத்திற்கான முதல் நாள் முதல் காட்சி உள்பட அனைத்து காட்சிகளின் டிக்கெட்டுக்களும் முன்பதிவாகிவிட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் தீபாவளி அன்று 'சர்கார்' படத்துடன் ஆர்.கே.சுரேஷ் நடித்த 'பில்லா பாண்டி' மற்றும் தினேஷ் நடித்த 'களவாணி மாப்பிள்ளை' ஆகிய படங்கள் வெளியாகவுள்ளது. இந்த நிலையில் 'களவாணி மாப்பிள்ளை' படத்தில் முக்கிய வேடத்தில் நடித்துள்ள நடிகர் ஆனந்த்ராஜ் அவர்கள் 'சர்கார்' மற்றும் 'களவாணி மாப்பிள்ளை' ஆகிய படங்கள் ஒரே நாளில் வெளியாகவுள்ளது குறித்து கூறியதாவது:

தீபாவளி அன்று நான் நடித்த 'களவாணி மாப்பிள்ளை' வெளியாகவுள்ளது. அதே நாளில் தம்பி விஜய் நடித்த 'சர்கார்' என்ற பெரிய படமும் வெளியாகவுள்ளது. 'சர்கார்' படம் மிகப்பெரிய வெற்றியடைய வாழ்த்துக்கள். 'சர்கார்' படத்திற்கு டிக்கெட் கிடைக்காதவர்கள் 'களவாணி மாப்பிள்ளை' படத்திற்கு வந்தால்கூட எங்கள் படம் வெற்றி அடைந்துவிடும். அதற்குரிய பெருமையும் தம்பி விஜய்யையே சேரும்' என்று கூறியுள்ளார்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.