முதல்முறையாக தளபதி விஜய்யுடன் பணிபுரிகிறார்களா இந்த இரட்டையர்கள்?

  • IndiaGlitz, [Saturday,August 22 2020]

தமிழ் சினிமாவில் முன்னணி ஸ்டண்ட் மாஸ்டர்களாக இருந்து வரும் அன்பு அறிவு என்ற இரட்டையர்கள் அன்பறிவ் என்ற பெயரில் பல திரைப்படங்களின் பணிபுரிந்து வருகின்றனர் என்பது தெரிந்ததே. சமீபத்தில் கூட சூப்பர் ஹிட்டான ‘கைதி’ என்ற திரைப்படத்தில் ஸ்டண்ட் அமைத்தவர்கள் இவர்கள்தான் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் விஷாலின் ‘ஆக்சன், ’சண்டக்கோழி 2’ உள்பட பல படங்களில் இந்த இரட்டையர்கள் பணிபுரிந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் முதன் முறையாக தளபதி விஜய்யுடன் இந்த இரட்டையர்கள் பணிபுரிய வாய்ப்பு இருப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளது. தளபதி விஜய் நடிப்பில் இயக்குனர் ஏஆர் முருகதாஸ் இயக்க உள்ள ’தளபதி 65’ படத்தில் அன்பறிவ் ஸ்டண்ட் இயக்குனர்களாக பணிபுரிய வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது. இயக்குனர் ஏஆர் முருகதாஸ் இந்த படத்திற்காக டெக்னிக்கல் டீம்களை கிட்டத்தட்ட முடிவு செய்துவிட்டதாகவும், தமன் இசையமைப்பாளராகவும், சந்தோஷ் சிவன் ஒளிப்பதிவாளராகவும், அன்பறிவ் ஸ்டண்ட் மாஸ்டர்களாகவும் பணிபுரிய வாய்ப்பு இருப்பதாகவும் இது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு இன்று வெளிவரும் என்றும் செய்திகள் வெளியாகியுள்ளன.

தளபதி விஜய்யின் ஒவ்வொரு படத்திலும் ஸ்டண்ட் காட்சிகள் பிரமாண்டமாக அமைக்கப்படும் என்ற நிலையில் அன்பறிவ் ஸ்டண்ட் இயக்கத்தில் ‘தளபதி 65’ படத்திலும் மாஸ் ஸ்டண்ட் காட்சிகள் இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

More News

வாணி போஜனின் அடுத்த படம்: டைட்டில் மற்றும் கதை குறித்த தகவல்

'தெய்வமகள்' உள்ளிட்ட தொலைக்காட்சி சீரியல்களில் நடித்த நடிகை வாணி போஜன், 'ஓ மை கடவுளே' என்ற திரைப்படத்தின் மூலம் வெள்ளித்திரையில் அறிமுகமானார்

கறிக்குழம்பு மாதிரி ஜம்முன்னு இருக்கு உங்க கசாயம்: சென்னை சித்தவைத்தியருக்கு பாராட்டு தெரிவித்த சூரி

கொரோனாவுக்கு இன்னும் மருந்து கண்டுபிடிக்காததால் உலகமே கொரோனா நோயாளிகளை காப்பாற்ற திணறி வரும் நிலையில் சென்னையை சேர்ந்த வீரபாபு

'ரிகவர்' ஆகும் தன்மை பூமியை போல மனுசனுக்கும் இருக்கு: விஜய்சேதுபதி

தனக்குத்தானே யாருடைய உதவியுமின்றி 'ரிகவர்' ஆகும் தன்மை பூமியைப் போலவே மனிதனுக்கும் இருப்பதாக நடிகர் விஜய்சேதுபதி பேட்டி ஒன்றில் கூறியுள்ளார்.

பாரா ஒலிம்பிக்கில் தங்கம் வென்ற தமிழக வீரர் மாரியப்பனுக்கு மிக உயரிய விருது அறிவிப்பு!

தமிழக விளையாட்டு வீரர் மாரியப்பன் தங்கவேலுவுக்கு ராஜீவ் காந்தி கேல் ரத்னா விருதை மத்திய அரசு அறிவித்துள்ளது 

திரைப்படமாகிறது கோழிக்கோடு விமான விபத்து சம்பவம்: இயக்குனர் யார் தெரியுமா?

பரபரப்பான ஒரு உண்மை சம்பவம் நடந்தால் அதனை உடனே திரையுலகினர் திரைப்படமாக எடுப்பது கடந்த பல வருடங்களாக வழக்கமாக இருந்து வருகிறது