'கேப்டன் மில்லர்' நிகழ்ச்சியில் என்ன நடந்தது? தொகுப்பாளினி ஐஸ்வர்யாவின் இன்ஸ்டா பதிவு!

  • IndiaGlitz, [Friday,January 05 2024]

தனுஷ் நடித்த ’கேப்டன் மில்லர்’ திரைப்படத்தின் புரமோஷன் விழா சமீபத்தில் சென்னை நேரு ஸ்டேடியத்தில் நடந்த நிலையில் இந்த விழாவில் கலந்து கொள்ள வந்த தொகுப்பாளினி ஐஸ்வர்யாவை கூட்டத்தில் இருந்த ஒருவர் தவறாக நடந்து கொண்டதை அடுத்து அந்த நபரை அவர் அடித்த வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. இந்த நிலையில் இது குறித்து ஐஸ்வர்யா தனது இன்ஸ்டாவில் விளக்கமாக பதிவு செய்துள்ளார்.

’கேப்டன் மில்லர்’ நிகழ்ச்சியில் நான் பங்கேற்க வந்த போது என்னிடம் ஒருவன் தவறாக நடந்து கொண்டான். உடனே அவனை விடாமல் துரத்தி பிடித்தேன். அவன் தப்பி ஓடி விடாமல் அவனை தொடர்ந்து பிடித்து அடித்தேன். ஒரு பெண்ணுடைய அங்கத்தை தவறான முறையில் தொடுவதற்கு அவனுக்கு எவ்வளவு தைரியம் இருந்திருக்கும். இது என்னால் ஏற்றுக்கொள்ளவே முடியவில்லை.

ஆனால் நல்ல வேலையாக என்னை சுற்றி நல்ல மனிதர்கள் இருந்தனர். மரியாதையான மனிதர்கள் மத்தியில் இப்படியும் சில அரக்கர்கள் இருக்கின்றனர் என்பதை நினைக்கும் போது பயமாக இருக்கிறது’ என்று பதிவு செய்துள்ளார்.

ஏற்கனவே மன்சூர் அலிகான் நடித்த ’சரக்கு’ என்ற திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழாவில் கூல் சுரேஷ் அவருக்கு வலுக்கட்டாயமாக மாலை போட்டது சர்ச்சையான நிலையில் தற்போது ’கேப்டன் மில்லர்’ விழாவில் நடந்த சர்ச்சையான நிகழ்விற்கும் அவர் விளக்கம் அளித்துள்ளார்.

More News

பணப்பெட்டியை எடுத்தவுடன் காலில் விழுந்து மன்னிப்பு கேட்ட போட்டியாளர்.. என்ன காரணம்?

பிக் பாஸ் நிகழ்ச்சியில் இந்த வாரம் பணப்பெட்டி டாஸ்க் வைக்கப்பட்ட நிலையில் ஒரு லட்ச ரூபாய் மதிப்புடன் தொடங்கிய பணப்பெட்டியின் மதிப்பு கொஞ்சம் கொஞ்சமாக உயர்ந்து கொண்டே வந்தது.

அவமானமா இருக்கு, தோல்வியை ஏத்துக்கிட முடியல.. அப்ப பெட்டிய  எடுத்துட்டு போயிரு.. யார் யாரின் உரையாடல்..!

பிக் பாஸ் சீசன் 7 நிகழ்ச்சியின் டைட்டில் வின்னர் அர்ச்சனா தான் என்பது கிட்டத்தட்ட  பார்வையாளர்கள் மட்டுமின்றி உள்ளே இருக்கும் போட்டியாளர்களும் முடிவு செய்துவிட்டனர்.

சரமாரியான கெட்ட வார்த்தை.. கத்தரி வைத்த சென்சார்.. 'கேப்டன் மில்லர்' ஃபைனல் ரன்னிங் டைம்..!

தனுஷ் நடித்த 'கேப்டன் மில்லர்' திரைப்படம் பொங்கல் விருந்தாக வரும் 12ஆம் தேதி வெளியாக இருக்கும் நிலையில் இந்த படத்தின் சென்சார் தகவல்கள் சற்று முன் வெளியாகி உள்ளன.

15 வருடங்களுக்கு பின் உருவாகும் 'மாயாண்டி குடும்பத்தார் 2': விஜய் பட இயக்குனரின் மாஸ் திட்டம்..!

'மாயாண்டி குடும்பத்தார்' என்ற திரைப்படம் கடந்த 2009 ஆம் ஆண்டு வெளியாகி மிகப்பெரிய வரவேற்பை பெற்ற நிலையில் தற்போது 15 ஆண்டுகள் கழித்து இந்த  படத்தின் இரண்டாம் பாகத்தை இயக்க விஜய்

சிறகடிக்க ஆசை: சொந்த தொழில் ஆரம்பித்த மீனா.. ஊக்குவிக்கும் முத்து.. எரிச்சலில் விஜயா.. இனி என்ன நடக்கும்?

 விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் 'சிறகடிக்க ஆசை' சீரியல் மிகப்பெரிய வரவேற்பை பார்வையாளர்கள் மத்தியில் பெற்றுள்ள நிலையில் ஒவ்வொரு வாரமும் இந்த சீரியலில் திடீர் திருப்பங்கள் வந்து கொண்டிருக்கின்றன.