close
Choose your channels

தளபதி 64 படத்தில் ஆண்ட்ரியா கேரக்டர் குறித்த ஆச்சரிய தகவல்!

Monday, November 11, 2019 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

தளபதி விஜய் நடிப்பில் இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கிவரும் 'தளபதி 64' படத்தின் படப்பிடிப்பு தற்போது டெல்லியில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்த படத்தின் படப்பிடிப்பு ஞாயிறு அன்று கூட விடுமுறை இல்லாமல் தொடர்ச்சியாக நடைபெற்று வருவதாகவும், சமீப காலத்தில் விஜய் படம் ஒன்று மிகக் குறுகிய காலத்தில் படப்பிடிப்பு முடிக்கப்படும் படம் அநேகமாக இதுவாகத்தான் இருக்கும் என்றும் கூறப்படுகிறது. அதே நேரத்தில் குறைந்த காலகட்டத்தில் முடிக்கப்பட்டாலும் இந்த படம் மிகப்பெரிய அளவில் ஆச்சர்யம் தரத்தக்க ஒரு படமாக உருவாகும் என்று படக்குழுவினர்களிடமிருந்து தகவல்கள் வெளியாகி உள்ளன.

இந்த நிலையில் இந்த படத்தில் ஒரு முக்கிய கேரக்டரில் நடிகை ஆண்ட்ரியா நடிக்க இருப்பதாக வெளிவந்த செய்தியை ஏற்கனவே பார்த்தோம். தற்போது வெளிவந்துள்ள தகவலின்படி இந்த படத்தில் ஆண்ட்ரியா ஆக்ஷன் ஹீரோயினாக நடிப்பதாகவும், இந்த படத்தில் அவருக்கு அதிரடி ஸ்டண்ட் காட்சிகளும் இருக்கும் என்றும் எதிர்பார்கப்படுகிறது.

மேலும் இந்த படத்தில் வில்லனாக நடிக்கவுள்ள விஜய் சேதுபதி வரும் டிசம்பர் முதல் படப்பிடிப்பில் கலந்து கொள்வார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அனிருத் இசையில் உருவாகும் இந்த படம் 2020 ஆம் ஆண்டு தமிழ் புத்தாண்டு தினத்தில் வெளியாக வாய்ப்பு இருப்பதாக கருதப்படுகிறது.

விஜய்க்கு ஜோடியாக மாளவிகா மேனன் நடித்து வரும் இந்த படத்தில் சாந்தனு, அந்தோணி வர்கீஸ், ஆண்ட்ரியா, பிரிகிதா உள்பட பலர் நடித்து வருகின்றனர்.
 

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.