வைரலாகும் ஆண்ட்ரியா-சித்தார்த் முத்தக்காட்சி வீடியோ

  • IndiaGlitz, [Monday,May 18 2020]

பிரபல நடிகை ஆண்ட்ரியா குறித்து அவ்வப்போது சர்ச்சைக்குரிய செய்திகள் வெளியாகி இணையதளத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி வருவது தெரிந்ததே. கடந்த சில வருடங்களுக்கு முன்னர் இசையமைப்பாளர் அனிருத் மற்றும் ஆண்ட்ரியாவின் லிப் லாக் புகைப்படங்கள் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. அதன்பின் ஆண்ட்ரியாவின் சில படுக்கையறை காட்சிகளும் வெளியாகிய நிலையில் சமீபத்தில் திருமணமான நடிகர் மற்றும் அரசியல்வாதியுடான உறவு குறித்து ஆண்ட்ரியாவே சில கருத்துக்களை வெளியிட்டு பெரும் பரபரப்பை ஏற்படுத்தினார்.

இந்த நிலையில் தற்போது மீண்டும் ஆண்ட்ரியாவின் லிப் லாக் விடியோ ஒன்று சமூக வலை வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. இந்த வீடியோ கடந்த 2017 ஆம் ஆண்டு வெளியான ’அவள்’ என்ற படத்தில் சித்தார்த் மற்றும் ஆண்ட்ரியா இணைந்து நடித்த காட்சிகளில் ஒன்று என்று கூறப்படுகிறது.

தற்போது விஜய், விஜய்சேதுபதியுடன் ’மாஸ்டர்’ படத்தில் இணைந்து நடித்துள்ள ஆண்ட்ரியா, இந்த படத்தை அவர் பெரிதும் எதிர்பார்த்து காத்திருக்கின்றார் என்பதும் இந்த படத்தின் ரிலீஸுக்கு பின்னர் கோலிவுட் திரையுலகில் மீண்டும் ஒரு சுற்று அவர் வருவார் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.