சுந்தர் சியின் அடுத்த படத்திற்காக பாடல் பாடிய ஆண்ட்ரியா: வீடியோ செம வைரல்

  • IndiaGlitz, [Friday,September 16 2022]

சுந்தர் சி யின் அடுத்த படத்தில் இடம் பெற்ற ஒரு பாடலை நடிகை ஆண்ட்ரியா பாடிய நிலையில் இந்த பாடலின் வீடியோ வெளியாகி இணையதளங்களில் வைரலாகி வருகிறது.

சுந்தர்சி நடிப்பில் உருவாகிய திரைப்படம் ’வல்லான்’. இந்த படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில் இந்த படத்தில் இடம்பெற்ற ’ஜில்லு ஜக்கம்மா’ என்ற பாடலை நடிகை ஆண்ட்ரியா பாடியுள்ளார். இந்த பாடலின் லிரிக் வீடியோ இணையதளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது.

ஆண்ட்ரியாமற்றும் ஸ்ரீநிஷா ஜெயசீலன் பாடிய இந்த பாடலை சந்தோஷ் தயாநிதி இசையமைத்துள்ளார். சுந்தர் சி, தன்யா ஹோப், சாந்தினி தமிழரசன், அபிராமி வெங்கடாச்சலம், ஹெபா பட்டேல் உள்பட பலரது நடிப்பில் உருவாகியுள்ள இந்த படத்தை மணி செய்யோன் இயக்கியுள்ளார். இவர் ஏற்கனவே சிபிராஜ் நடித்த ‘கட்டப்பாவ காணோம்’ என்ற படத்தை இயக்கியவர் என்பது குறிப்பிடத்தக்கது.

மணி பெருமாள் ஒளிப்பதிவில் தினேஷ் பொன்ராஜ் படத்தொகுப்பில் உருவாகிய இந்த படம் விரைவில் திரையரங்குகளில் வெளியாக உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

More News

ரம்பா மகளின் அசத்தல் புகைப்படம்.. அச்சு அசலாக யார் போல் இருக்கிறார் தெரியுமா?

நடிகை ரம்பாவின் சிறுவயது புகைப்படத்தை அவரது கணவர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ள நிலையில் அச்சு அசலாக அவர் ரம்பாவின் மகள் போன்றே இருப்பது பெரும் ஆச்சரியத்தை ஏற்படுத்தி உள்ளது.

12 வருடங்களுக்கு முன்பே 'வெந்து தணிந்தது காடு' படத்தின் கதையை கோடிட்ட கவுதம் மேனன்!

சிம்பு நடிப்பில் , கவுதம் மேனன் இயக்கத்தில் உருவாகிய 'வெந்து தணிந்தது காடு' திரைப்படம் நேற்று உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியான நிலையில் இந்த படத்திற்கு ஏராளமான ஊடகங்கள்

அட்டகாசமான வில்லத்தன நடிப்பு: தனுஷின் 'நானே வருவேன்' டீசர்!

தனுஷ் நடிப்பில் செல்வராகவன் இயக்கத்தில் யுவன் சங்கர் ராஜா இசையில் கலைபுலி எஸ் தாணு அவர்களின் தயாரிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் 'நானே வருவேன். ஹீரோ மற்றும் வில்லன்

இன்ஜினியரிங் படித்துவிட்டு தமிழ் சினிமாவில் கலக்கும் 5 பிரபலங்கள் பற்றி தெரியுமா?

இந்தியாவில் பொறியாளர்களின் பங்களிப்பைப் பாராட்டுவதற்காகச் சிறந்த இன்ஜினியர் எனப் பாரட்டப்படும் விஸ்வேஸ்வரய்யாவின்

கார்த்தியின் 'சர்தார்' படத்தின் செம அப்டேட் கொடுத்த ஜிவி பிரகாஷ்: ரசிகர்கள் உற்சாகம்!

நடிகர் கார்த்தி நடித்துள்ள 'சர்தார்' திரைப்படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்து தற்போது போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் நடைபெற்று வருவதாக தகவல் வெளியாகி உள்ளன.