போர் ஒரு நாள் முடிவடையும்.. ஆனால் அதற்கான விலையை யார் தருவார்கள்: ஆண்ட்ரியா பகிர்ந்த கவிதை..!


Send us your feedback to audioarticles@vaarta.com


இந்தியா - பாகிஸ்தான் இடையே போர் தீவிரமடைந்து வரும் நிலையில் கவியரசு வைரமுத்து, இயக்குனர் பார்த்திபன் உள்ளிட்டோர் தங்கள் சமூக வலைத்தளங்களில் போர் குறித்து கவிதை வடிவில் பதிவு செய்தனர். அந்த வகையில் நடிகை ஆண்ட்ரியா பாலஸ்தீன கவிதை ஒன்றை பகிர்ந்து உள்ள நிலையில் அது தற்போது வைரலாகி வருகிறது. அந்த கவிதை இதுதான்:
போர் ஒருநாள் முடிவடையும்
தலைவர்கள் கைகுலுக்கிக் கொள்வார்கள்
இறந்துபோன மகனின் வருகைக்காக
வயதான தாய் காத்திருப்பாள்
காதல் கணவனை எதிர்பார்த்து
காத்திருப்பாள் அந்தப் பெண்
அந்தக் குழந்தைகள்
தங்கள் சாகச அப்பாவின் வருகையை
எதிர்பார்த்து காத்திருப்பார்கள்
எங்கள் மண்ணை யார் விற்றார்கள்
என எனக்குத் தெரியாது
ஆனால், அதற்கான விலையை
யார் தருகிறார்கள் என்பதற்கு
சாட்சி நான்
மெஹமுத் டார்விஷ் என்ற பாலஸ்தீனிய கவிஞர் இந்த கவிதையை போர் குறித்து உருக்கமான வரிகளால் எழுதியுள்ளார். இந்த கவிதையை ஆண்ட்ரியா மட்டுமின்றி பலரும் பகிர்ந்து வருகின்றனர்.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
- logoutLogout

-
Aadhira Palani
Contact at support@indiaglitz.com