close
Choose your channels

ஜாக்கிசான் குழந்தை மனம் படைத்தவர். தனுஷ் நாயகி

Wednesday, February 10, 2016 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

தனுஷ் நடித்த 'அனேகன்' படத்தில் அவருக்கு ஜோடியாக நடித்த நடிகை அமைரா, தற்போது ஜாக்கிசான் நடித்து வரும் 'குங்பூ யோகா' என்ற படத்தில் முக்கிய கேரக்டரில் நடித்து வருகிறார். இந்த படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில் ஜாக்கிசானுடன் நடித்த அனுபவங்கள் குறித்து சமீபத்தில் அளித்த ஒரு பேட்டியில் அமைரா கூறியுள்ளார்.

ஜாக்கிசான் ஒரு குழந்தை போல படப்பிடிப்பில் இருப்பார். நான் நடிக்கும் காட்சிகளை கூர்ந்து கவனித்து எனது நடிப்பில் தவறு இருந்தால் சுட்டிக்காட்டுவார். ஜாக்கிசானின் மற்ற படங்களைபோலவே இந்த படத்திலும் ஆக்சனும் காமெடியும் சம அளவில் கலந்து இருக்கும்.

இந்த படத்திற்காக அதிகமாக ரிஸ்க் எடுத்து சண்டைக்காட்சிகளில் நடித்துள்ளேன். இந்த படத்தில் நடித்தபோது ஏற்பட்ட காயங்களின் தழும்புகள் இன்னும் எனது வலது கையில் இருக்கின்றன. Mr. X படத்தில் நான் நடித்த ஆக்சன் காட்சிகள்தான் எனக்கு ஜாக்கிசானுடன் நடிக்கும் வாய்ப்பை ஏற்படுத்தி தந்துள்ளது என்றும் நம்புகிறேன்' என்று கூறியுள்ளார்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.