'அங்கடித்தெரு' கனவு நனவாகிறது: தமிழக அரசுக்கு நன்றி கூறிய வசந்தபாலன்

  • IndiaGlitz, [Monday,September 06 2021]

தமிழகத்தில் உள்ள கடைகளில் நின்று கொண்டே பணி புரியும் ஊழியர்களுக்கு இருக்கைகள் அமைக்க வேண்டும் என தமிழக அரசு புதிய சட்டம் ஒன்றை கொண்டுவந்துள்ளதற்கு இயக்குனர் வசந்தபாலன் பாராட்டியுள்ளார்

சட்டசபையில் இன்று அமைச்சர் திட்டக்குடி கணேசன் அவர்கள் நகைக்கடைகள், ஜவுளி கடைகள் உள்ளிட்ட வணிக கடைகளில் நின்றுகொண்டே ஊழியர்கள் பணி செய்து கொண்டிருக்கும் நிலையில் அவர்களுக்கு இருக்கைகள் வழங்க வேண்டுமென புதிய சட்ட முன்வடிவை கொண்டுவந்தார். இந்த சட்டம் வரும் 13ஆம் தேதி சட்டமன்றத்தில் குரல் வாக்கெடுப்புக்கு பின் நிறைவேறும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்

தமிழக அரசின் இந்த புதிய சட்டத்திற்கு அனைத்து கட்சி தலைவர்களும் பாராட்டுகளை தெரிவித்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் ’அங்காடித்தெரு’ திரைப்படத்தில் இதுகுறித்து காட்சிகள் மூலம் உணர்த்திய இயக்குனர் வசந்தபாலன் தமிழ்நாடு அரசுக்கு நன்றி தெரிவித்துள்ளார்.

என்னுடைய அங்காடித்தெரு’ திரைப்படத்தின் கனவு மெல்ல மெல்ல நிறைவேறுகிறது. அங்காடி திரைப்படத்தில் தொடர்ந்து நின்று கொண்டே வேலை செய்வதால் கால்களில் ஏற்படக்கூடிய வெரிகோஸ் நோய் பற்றி கூறியிருப்பேன் என்பது உங்களுக்கு நினைவிருக்கலாம். தமிழக அரசுக்கு நன்றி என்று கூறியுள்ளார்

ஏற்கனவே ‘மிக மிக அவசரம்’ என்ற படத்தில் கூறப்பட்டிருந்தது போல் பெண் போலீசார் இனி சாலைப்பாதுகாப்பு பணிகளில் ஈடுபடுத்த மாட்டார்கள் என தமிழக அரசு கடந்த சில வாரங்களுக்கு முன் அறிவித்தது என்பது தெரிந்ததே