close
Choose your channels

முதல் திருமணத்தை மறைத்து 2வது திருமணம்: நடிகை வீட்டில் தகராறு செய்த உதவி இயக்குனர்

Tuesday, April 20, 2021 • தமிழ் Comments

சென்னை மணலி அருகே சின்னத்திரை நடிகை ஒருவர் தன்னுடைய முதல் திருமணத்தை மறைத்து இரண்டாவது திருமணம் செய்யவிருந்த நிலையில் அவரது வீட்டில் அவரது காதலரும் உதவி இயக்குனருமான ஒருவர் தகராறில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

சென்னை மணலி அருகே உள்ள பல்ஜிபாளையம் என்ற பகுதியை சேர்ந்தவர் நடிகை ஜெனிபர். இவர் தனியார் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் தொடரில் நடித்து வருகிறார். ஏற்கனவே திருமணமான இவர் கருத்து வேறுபாடு காரணமாக கணவரை பிரிந்து வாழ்கிறார். இந்த நிலையில் தான் நடித்து வரும் தொடரில் உதவி இயக்குனரான நவீன்குமார் என்பவருடன் ஜெனிபருக்கு காதல் ஏற்பட்டது. இருவரும் திருமணம் செய்ய முடிவு செய்திருந்த நிலையில் முதல் திருமணத்தை மறைத்து விட்டதாக கூறி ஜெனிபரின் வீட்டிற்கு சென்று நவீன்குமார் தகராறில் ஈடுபட்டுள்ளார்.

இந்த தகறாரில் ஜெனிபரின் தந்தை மற்றும் ஒருசிலர் நவீன்குமாரை தாக்கியதாக கூறப்படுகிறது. இதனையடுத்து நவீன்குமார் குடும்பத்தினர் ஜெனிபரின் தந்தை வீட்டிற்கு சென்று தகராறு செய்துள்ளதாக தெரிகிறது. இந்த நிலையில் இருதரப்பினர்களும் கொடுத்த புகாரின் அடிப்படையில் இது தொடர்பாக மணலி போலீசார் விசாரித்து வருகின்றனர்.

Get Breaking News Alerts From IndiaGlitz