'இந்தியன் 2' படத்தில் இணைந்த பாலிவுட் பிரபலம்!

  • IndiaGlitz, [Tuesday,October 01 2019]

உலக நாயகன் கமல்ஹாசன் நடிப்பில் பிரம்மாண்ட இயக்குனர் ஷங்கர் இயக்கத்தில் லைக்கா நிறுவனத்தின் தயாரிப்பில் அனிருத் இசையில் உருவாகி வரும் திரைப்படமான ’இந்தியன் 2’படத்தின் அடுத்தகட்ட படப்பிடிப்பு சமீபத்தில் தொடங்கி சென்னை, ராஜமுந்திரி போன்ற பகுதிகளில் நடைபெற்று வருகிறது. கமல்ஹாசன் உள்பட படக்குழுவினர் இந்த படப்பிடிப்பில் கலந்து கொண்டனர்.

இந்த நிலையில் இந்த படத்தில் ஏற்கனவே பல பிரபல நடிகர், நடிகைகள் நடித்து வரும் நிலையில் தற்போது மேலும் ஒரு பாலிவுட் பிரபலம் இணைந்துள்ளார். ஆம், இந்த படத்தில் பிரபல பாலிவுட் நடிகர் அனில்கபூர் இணைந்துள்ளதாக செய்திகள் வெளிவந்துள்ளது. அனில்கபூர் ஏற்கனவே ஷங்கரின் ‘முதல்வன்’ படத்தின் இந்தி ரீமேக்கான ‘நாயக்’ என்ற படத்தில் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. ‘இந்தியன் 2’ படத்தில் அனில்கபூரின் கேரக்டர் என்ன என்பது இன்னும் சில நாட்களில் தகவல் வெளிவரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

கமல்ஹாசன், காஜல்அகர்வால், ரகுல் பிரீத்திசிங், பிரியா பவானிசங்கர், சித்தார்த், பாபி சிம்ஹா, விவேக், வித்யூத் ஜம்வால், சமுத்திரகனி, டெல்லி கணேஷ், உள்பட பலர் நடித்து வரும் இந்த படத்திற்கு அனிருத் இசையமைத்து வருகிறார். ரத்னவேலு ஒளிப்பதிவில்,ஸ்ரீகர் பிரசாத் படத்தொகுப்பில் உருவாகி வரும் இந்த படம் பிரமாண்டமான பட்ஜெட்டில் தயாராகி வருகிறது. மேலும் இந்த படத்தை வரும் 2021 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் வெளியிட படக்குழுவினர் திட்டமிட்டுள்ளனர்.

More News

நான் ஏன் பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டேன்: மனம் திறக்கும் கவின்

பிக்பாஸ் நிகழ்ச்சியின் போட்டியாளர்களில் ஒருவரான கவின், டைட்டிலை வெல்வாரோ இல்லையோ, நிச்சயம் இறுதி போட்டிக்கு தகுதி பெறுவார் என்றே பலர் கணித்திருந்தனர்.

தமன்னாவின் அடுத்த படத்தில் விஜய்யின் குட்டிக்கதை

தமன்னா நடிப்பில் உருவாகியுள்ள 'பெட்ரோமாக்ஸ்' திரைப்படம் வரும் அக்டோபர் 11ஆ,ம் தேதி வெளியாகவுள்ள நிலையில் இந்த படத்தின் டிரைலர் சற்றுமுன் வெளியாகியுள்ளது

'பிகில்' படத்தில் இணைந்த பிரபல தொழில்நுட்ப கலைஞர்!

தளபதி விஜய் நடித்த 'பிகில் படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் முடிவடைந்து தற்போது முழுவீச்சில் போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் நடைபெற்று வருகிறது.

'தளபதி 64' படத்தின் முதல் அதிகாரபூர்வ தகவல்

தளபதி விஜய் நடித்த 'பிகில்' படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்து வரும் தீபாவளி அன்று உலகம் முழுவதும் பிரமாண்டமாக வெளியாகவுள்ளது. இந்த திரைப்படத்திற்கு

'தல' மாதிரியே 'தல' ரசிகர்களும் நல்லவங்க: பிக்பாஸ் அபிராமி

சமீபத்தில் பேனர் கலாச்சாரத்தால் சென்னை இளம்பெண் பரிதாபமாக மரணம் அடைந்த நிலையில் மாஸ் நடிகர்களின் ரசிகர்கள் இனிமேல் தங்கள் விருப்பத்திற்குரிய நடிகரின் படங்கள் வெளியாகும்போது