உன் அப்பா மேல நீ வச்சிருக்கிறது பாசம் கிடையாது, அது ஒரு வியாதி: 'அனிமல்' டிரைலர்..!

  • IndiaGlitz, [Thursday,November 23 2023]

ரன்பீர் கபூர், ராஷ்மிகா மந்தனா, அனில் கபூர், பாபி தியோல் உள்பட பலர் நடிப்பில் உருவான ’அனிமல்’ என்ற திரைப்படம் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் மற்றும் ஹிந்தி ஆகிய ஐந்து மொழிகளில் வரும் டிசம்பர் 1ஆம் தேதி உலகம் முழுவதும் வெளியாக உள்ளது.



இந்த படத்தின் ரன்னிங் 3 மணி நேரத்துக்கு மேல் இருக்கும் நிலையில் இந்த படத்தின் டிரைலர் மூன்று நிமிடங்களுக்கு மேல் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. இதில் அப்பா மேல் வெறித்தனமாக அன்பு வைத்திருக்கும் ஒரு மகன் செய்யும் அடுக்கடுக்கான கொலைகள், அதனால் ஏற்படும் விபரீதம் என்ன என்பதுதான் இந்த படத்தின் கதையாக உள்ளது.



மிகவும் பிரம்மாண்டமாக, அதிரடி ஆக்ஷன் காட்சிகளுடன் செண்டிமெண்ட் காட்சிகளுடன் எடுக்கப்பட்ட இந்த படம் அனைத்து தரப்பு சினிமா ரசிகர்களையும் கவரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் இந்த படம் வெளியானால் பாலிவுட்டில் ராஷ்மிகா மந்தனாவுக்கு அதிக வாய்ப்புகள் கிடைக்கும் என்பது எதிர்பார்க்கப்படுகிறது.