இது பிரேக் அப் அல்ல, வெறும் பிரேக் தான். தனுஷ் பிரிவு குறித்து அனிருத்

  • IndiaGlitz, [Monday,January 09 2017]

தனுஷின் '3' படத்தில் இசையமைப்பாளராக அறிமுகமான அனிருத், 'கொலைவெறி' பாடலின் மூலம் உலகப்புகழ் பெற்றார். அதன்பின்னர் தனுஷ் நடித்த வேலையில்லா பட்டதாரி', மாரி, தங்கமகன்' ஆகிய படங்களுக்கு அனிருத் இசையமைத்தார். இந்நிலையில் இருவரும் திடீரென கருத்துவேறுபாடு காரணமாக பிரிந்துவிட்டதாக கூறப்பட்டது.

தனுஷின் தற்போதைய படங்களில் வெவ்வேறு இசையமைப்பாளர்கள் இசையமைத்து வரும் நிலையில் இந்த பிரிவு குறித்து முதல்முறையாக அனிருத் வெளிப்படையாக பேசியுள்ளார்.

ஒரு படைப்பாளி ஒரே நடிகருடன் அடுத்தடுத்து பணியாற்றினால் ரசிகர்களுக்கு போர் அடித்துவிடும். இதுவே சிறிய இடைவெளி விட்டு பணியாற்றினால் பார்வையாளர்கள் மகிழ்ச்சி அடைவர். அந்தவகையில் ரசிகர்களின் ரசனைக்கு மதிப்பளித்து நானும் தனுஷும் ஒரு குட்டி பிரேக் எடுத்துள்ளோம். விரைவில் மீண்டும் இணைந்து பணியாற்றுவோம் என்று கூறியுள்ளார்.

தனுஷ்-அனிருத் இடையே ஏற்பட்ட பிரிவு, பிரேக்-அப் என்று அனைவரும் கருதிய நிலையில் இது வெறும் பிரேக் மட்டுமே என்று அனிருத் அளித்த விளக்கம் இருதரப்பு ரசிகர்களையும் உற்சாகத்தில் ஆழ்த்தியுள்ளது.

More News

பொங்கல் விடுமுறை ரத்து. தமிழர்களுக்கு மத்திய அரசின் தொடர் துரோகம்

பொங்கல் பண்டிகை என்பது காலங்காலமாக தமிழர்கள் கொண்டாடி வரும் தமிழ் கலாச்சார பண்டிகை.

'பைரவா' ரிலீஸால் அப்செட் ஆன விஜய் ரசிகர்கள்?

இளையதளபதி விஜய் நடித்த 'பைரவா' படத்தை பொங்கல் பண்டிகையுடன் சேர்த்து பிரமாண்டமாக கொண்டாட விஜய் ரசிகர்கள் தயாராக உள்ளனர்

பிரபல இயக்குனர் தான் ஓரினசேர்கையாளர் என்று பகிரங்க ஒப்புதல்

பிரபல பாலிவுட் இயக்குனர் கரண்ஜோஹரின் செக்ஸ் வாழ்க்கை குறித்து கடந்த பல வருடங்களாக சர்ச்சைக்குரிய கருத்துக்கள் வெளிவந்து அவரை வெறுப்பேற்றுவது உண்டு.

விஜய் ரசிகர்களை ஆச்சரியப்படுத்திய தல ரசிகர்களின் கட்-அவுட்

இளையதளபதி விஜய்யும், தல அஜித்தும் கோலிவுட் திரையுலகில் தொழில்முறையில் போட்டியாளர்களாக இருந்தாலும் இருவரும் நெருங்கிய நண்பர்கள்...

முடிவுக்கு வந்தது பெட்ரோல் பங்க் - டெபிட் கார்டு பிரச்சனை

கிரெடிட், டெபிட் கார்டு மூலம் நடைபெறும் பணப் பரிவர்த்தனைக்கு வங்கிகள் 1 சதவீதம் சேவை வரி விகிப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து இன்று அதிகாலை முதல் பெட்ரோல் நிலையங்களில் டெபிட் கார்டு மற்றும் கிரெடிட் கார்டுகள் ஏற்றுக்கொள்ளப்பட மாட்டாது என்று தமிழ்நாடு பெட்ரோல் நிலைய முகவர்கள் சங்கம் நேற்று அறிவித்திருந்தது.